போராட்டங்கள் மக்கள் பொதுவாழ்க்கையில் ஈடுபடுவதை காட்டுகிறது !அதிமுக எம்.எல்.ஏ நட்ராஜ்
அதிமுக எம்.எல்.ஏ நட்ராஜ் , தமிழகத்தில் அதிக போராட்டங்கள் நடைபெறுவது மக்கள் பொதுவாழ்க்கையில் ஈடுபடுவதைக் காட்டுவதாக தெரிவித்துள்ளார்.
சென்னை தியாகராய நகரில் செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம், தமிழகத்தில் அதிகளவில் போராட்டங்கள் நடைபெற்று வருவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த நட்ராஜ், தமிழகத்தில் மட்டும்தான் ஆண்டுக்கு 20,000 போராட்டங்கள் நடப்பதாகவும், ஜனநாயகத்திற்கு மதிப்பளித்து போராட்டம் நடத்த இடம் கொடுக்கப்படுவதையே இது காட்டுவதாகவும் கூறினார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.