போக்குவரத்து விதி மீறலில் ஈடுபட்ட ஒரு லட்சத்து 30 ஆயிரத்து 559 பேரின் ஓட்டுநர் உரிமம் ரத்து.!
- சென்னை போக்குவரத்து காவல்துறை விதி மீறலில் ஈடுபட்ட புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளது.
- இந்த ஆண்டில் மட்டும் போக்குவரத்து விதி மீறலில் ஈடுபட்ட ஒரு லட்சத்து 30 ஆயிரத்து 559 பேரின் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
சென்னை போக்குவரத்து காவல்துறை போக்குவரத்து விதி மீறலில் ஈடுபட்ட புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளது. கடந்த 2018-ம் ஆண்டில் 7749 விபத்துகள் நடைபெற்றதாகவும், அதில் 1,260 பேர் விபத்தில் பலியானதாகவும் தெரிவித்தனர். நடப்பாண்டில் 6832 விபத்துக்கள் ஏற்பட்டுள்ளதாகவும், அதில் 1,224 பேர் விபத்தில் பலியானதாகவும் குறிப்பிட்டனர். பின்னர் சென்னையில் போக்குவரத்து விதிமீறல்கள் ஈடுபட்டவர்களின் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்வதற்காக 1 லட்சத்து 77 ஆயிரம் பேர் பரிந்துரை செய்யப்பட்டதாகவும், இதுவரை சுமார் 1 லட்சத்து 30 ஆயிரத்து 159 பேர் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே குடித்து விட்டு வாகனம் ஓட்டுபவர்களின் எண்ணிக்கை கடந்த இரு ஆண்டுகளில் இருமடங்கு உயர்ந்துள்ளதாகவும், இந்த ஆண்டு 51,900 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இ-சலான் முறையில் இந்த ஆண்டில் மட்டும் 29 கோடியே 80 லட்சம் ரூபாயினை சென்னை போக்குவரத்து போலீசார் வசூல் செய்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.