போக்குவரத்து நெரிசலை தீர்க்க காஞ்சிபுரத்தில் ரயில்வே கேட் மேம்பாலம் ! அமைச்சர் பெஞ்ஜமின்
அமைச்சர் பெஞ்ஜமின் காஞ்சிபுரம் நகரில் இருந்து, பொன்னேரி கரை வழியாக 50 புள்ளி 7 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுவரும் புதிய மேம்பாலத்தை ஆய்வு செய்தார். புதிய ரயில் நிலைய வழி, வெள்ளக்கேட் கடவு பாதை வழி உட்பட காஞ்சிபுரத்தின் பல இடங்களில், போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வின்றி இருந்தது.
இப்பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் பொன்னேரிகரை வழியாக, U வடிவில், 750 மீட்டர் நீளத்தில், நான்கு வழிச்சாலையுடன், 32 அடி உயரம், 50 மீட்டர் அகலம் கொண்டதாக மேம்பாலம் நிர்மாணிக்கப்படுகிறது. இந்த மேம்பால பணிகளை, ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் மாண்புமிகு பெஞ்ஜமின் ஆய்வு செய்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.