கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஜமீன் ஊத்துக்குளியில் தனியார் தென்னை நார் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இங்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ஓஷா என்ற வாலிபரும் பத்மாவதி என்ற இளம் பெண்ணும் வேலைக்கு சேர்ந்தனர்.
இந்நிலையில் நேற்று அவர்கள் வேலை செய்து கொண்டு இருந்தனர். அப்போது திடீரென்று அவர்கள் இருவரும் தங்களுக்கு மயக்கம் வருவதுபோன்று இருப்பதாக சக தொழிலாளியிடம் தெரிவித்தனர். உடனே அவர்கள் அந்த 2 பேரையும் அந்தப்பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்த பின்னர், மேல் சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு பத்மாவதியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவருடைய உடல் பிரேத பரிசோதனை கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
மேலும் ஓஷாவின் உடலில் விஷப்பூச்சி கடித்ததற்கான அடையாளம் இருந்தது.இதையடுத்து அவரை மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பத்மாவதி எப்படி இறந்தார்? என்பது தெரியவில்லை.
அவருடைய மர்ம சாவு குறித்து பொள்ளாச்சி மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.இது குறித்து போலீசார் , ‘ஓஷா, பத்மாவதி இருவரும் காதலர்களா? அல்லது கணவன்–மனைவியா?, அவர்கள் இருவரும் விஷம் குடித்தார்களா என்பது தெரியவில்லை. பத்மாவதி உடலை பிரேத பரிசோதனை செய்ததற்கான அறிக்கை வந்த பின்னர்தான் முழு விவரமும் தெரியவரும்’ என்றனர்.
நியூ யார்க் : அமெரிக்காவில் அண்மையில் தேர்தல் முடிந்து குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் அதிபராக வெற்றி பெற்றார்.…
சென்னை : வரும் ஜனவரி 10-ஆம் தேதி சில மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது எனவும், வரும் நாட்களில் வானிலை எப்படி…
சிட்னி : ஆஸ்ரேலியா அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி ஜனவரி 3 சிட்னி மைதானத்தில் தொடங்கியது. இதில் முதலில்…
ஸ்ரீஹரிகோட்டா : கடந்த ஆண்டு டிசம்பர் 30-ஆம் தேதி ஆந்திர பிரதேசம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி…
சென்னை : அண்ணா பல்கலைகழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக பல்வேறு கட்சியினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று…
சிட்னி : இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் சமீபத்திய டெஸ்ட் பார்ம் மோசமாக இருப்பதால் அவர் மீது கடுமையான விமர்சனங்கள்…