பொறியியல் வேலைக்கு தகுதியானவர்கள் தமிழகத்தில் இல்லை!உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன்
பொறியியல் வேலைக்கு தகுதியானவர்கள் தமிழகத்தில் இல்லை என்பதே பிரச்சனை என்று உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.
அண்ணா பல்கலைக்கழகத்தின் 38வது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது. இதில், தமிழக ஆளுனர் பன்வாரிவால் புரோகித், உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன், இந்திய அறிவியல் கழகத்தின் முன்னாள் இயக்குனர் பல்ராம், பல்கலைகழக துணை வேந்தர் சூரப்பா ஆகியோர் பங்கேற்றனர். பின்னர் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன், தமிழகத்தில் பொறியியல் பட்டதாரிகளுக்கு உரிய வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்றார். மாணவர்களை வேலைக்கு தகுதியானவர்களாக உருவாக்குவதோடு, ஆற்றல்மிக்கவர்களாக உருவாக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.