பொறியியல் படிப்புக்கான பொது கலந்தாய்வு 25ம் தேதி தொடக்கம்
ஜூலை 16,17ல் பொறியியல் படிப்புகளில் சிறப்பு பிரிவினருக்கான 2ம் கட்ட கலந்தாய்வு நடைபெறுகிறது என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
மேலும் ஜூலை 16ம் தேதி முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கான 2ம் கட்ட கலந்தாய்வு நடக்கிறது. ஜூலை 17ல் விளையாட்டு பிரிவு மாணவர்களுக்கான 2ம் கட்ட கலந்தாய்வு நடக்கிறது என்று அறிவித்துள்ளது.அதை தொடர்ந்து பொது கலந்தாய்வு தொடங்கும் என அறிவிக்கப்பட்டது.
பொறியியல் படிப்புக்கான பொது கலந்தாய்வு வரும் 25ம் தேதி அண்ணா பல்கலை.யில் தொடக்கம் – அமைச்சர் அன்பழகன் அறிவிப்பு
கலந்தாய்வுக்காக மாவட்ட தலைநகர்களில் 42 சேவை மையங்கள் தொடங்கப்பட்டுள்ளது – அன்பழகன்