பொறியியல் படிப்புகளில் சேர கடந்த ஆண்டைக் காட்டிலும் 11 ஆயிரம் பேர் கூடுதலாக விண்ணப்பித்துள்ளனர். மொத்தத்தில் ஒரு லட்சத்து 59 ஆயிரம் பேர் விண்ணப்பித்து உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பி.இ, பி.டெக் படிப்புகளுக்கு இந்த ஆண்டு ஆன்லைன் கலந்தாய்வு முறையை அண்ணா பல்கலைகழகம் அறிமுகப்படுத்தியது. மாணவர்களின் வசதிக்காக அனைத்து மாவட்டங்களிலும் 42 உதவி மையங்களும் அமைக்கப்பட்டிருந்தன. தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தை தொடர்ந்து, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இணையசேவை முடக்கப்பட்டதால், விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் சனிக்கிழமை வரை நீட்டிக்கப்பட்டது.
42 உதவி மையங்களில் மாலை 5 மணியுடன் விண்ணப்பிப்பதற்கான அவகாசம் முடிவடைந்தது. எனினும் இணையதளம் மூலம் இரவு 12 மணி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மாலை 6 மணி நிலவரப்படி, பொறியியல் படிப்பில் சேர்வதற்காக ஒரு லட்சத்து 52 ஆயிரத்து 940 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
கடந்த ஆண்டு ஒரு லட்சத்து 41 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், நடப்பாண்டில் கூடுதலாக 11 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். ஜுன் 8ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை சான்றிதழ் சரிபார்ப்பும், ஜூலை மாதத்தில் கலந்தாய்வும் தொடங்கும். இதற்கான நேரம், நாள் ஆகியவவை எஸ்எம்எஸ் மற்றும் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
சென்னை : கடந்த சில நாட்களாக உச்சம் தொட்டு வந்த தங்கத்தின் விலை தற்போது மீண்டும் சற்று உயர்ந்துள்ளது. தொடர்ந்து…
கொழும்பு : இலங்கையில் நிலவிய மோசமான பொருளாதர சூழலை அடுத்து ஜனாதிபதி, பிரதமர் பதவி விலகிய நிலையில், நாட்டின் புதிய…
சென்னை : நடைபெற்ற இலங்கை புதிய நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் அதிபர் அனுரகுமார திஸாநாயக்க கூட்டணி…
சென்னை : ஆளும் திமுக அமைச்சரவையில் மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சராக பொறுப்பில் இருப்பவர் செந்தில் பாலாஜி. இவர்…
வெல்லிங்டன் : நியூஸிலாந்தில் 22 வயதான இளம் வயது பெண் எம்பி பார்லிமென்டில் வித்தியாசமான முறையில் மசோதாவை எதிர்த்து, தனது…
வாஷிங்டன் : சமூக வலைத்தளமான பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகியவை 'மெட்டா' நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. இவற்றை மார்க்…