பொதுமக்கள் கூட்டம் கூடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் – முதல்வர் மு.க.ஸ்டாலின்

Default Image

ஓமைக்ரான் பரவல் அதிகரித்து வந்த நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின் சில முக்கியமான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

அதன்படி, தமிழ்நாட்டில், தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், அரசு ஆணை எண்.882, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை 15.12.2021 முதல் 31.12.2021 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நடைமுறையில் இருந்தது.

பண்டிகை காலங்களில் கொரொனா நோய்த்தொற்று மற்றும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், தற்போது தமிழ்நாட்டில் பரவி வரும் உருமாறிய கொரோனா வைரஸ் நோயை கருத்தில் கொண்டும், தடுப்பூசி செலுத்தும் பணியினை விரிவுபடுத்தவும், தலைமைச் செயலகத்தில் எனது தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாண்புமிகு மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் திரு மா.சுப்பிரமணியன், தலைமை செயலாளர், அரசுத் துறை செயலாளர்கள் மற்றும் மருத்துவ வல்லுநர்களான உலக சுகாதார நிறுவனத்தின் முதுநிலை ஆராய்ச்சியாளர் மருத்துவர் சௌமியா சுவாமிநாதன், இந்திய மருத்துவ ஆராய்ச்சி குழுமத்தின் இயக்குநர் மருத்துவர் மனோஜ் முர்ஹேக்கர, துணை இயக்குநர் மருத்துவர் பிரதீப் கவுர். வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையின் இயக்குநர் மருத்துவர் ஜே.வி. பீட்டர். உலக சுகாதார மையத்தின் தென் மண்டலக் குழுத் தலைவர் மருத்துவர் கே.என். அருண்குமார், இந்திய மருத்துவச் சங்கத்தின் தலைவர் மருத்துவர் பழனிச்சாமி, ஓய்வு பெற்ற நகர பி. குகானந்தம், அப்போலோ சுகாதார அலுவலர் மருத்துவனையின் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

நம் மாநிலத்தில், கொரோனா, ஒமைக்ரான் வைரஸ் நோய்களை கட்டுப்படுத்துதல் மற்றும் அவற்றின் பரவலாக்கத்தினை குறைத்தல் குறித்து பல்வேறு ஆலோசனைகளை மருத்துவ வல்லுநர்கள் வழங்கினார்கள்.

மருத்துவக் குழுவின் ஆலோசனையின்படி ஏற்கெனவே அனுமதிக்கப்பட்டுள்ள செயல்பாடுகள், உரிய கட்டுப்பாடுகளுடன் தொடர்ந்து அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், எதிர்வரும் பண்டிகைக் காலங்களில் பொது மக்கள் ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் கூடுவதால் கொரோனா மற்றும் ஒமைக்ரான் நோய்த் தொற்று பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளதைக் கருத்தில் கொண்டு. பொது மக்கள் கீழ்க்கண்ட வழிமுறைகளை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என அன்புடன் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.

பொதுமக்கள் அனைவரும் கூட்டம் கூடுவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்.  பொது மக்கள் வீட்டை விட்டு வெளியில் வரும்போதும் கட்டாயம் முகக் கவசம் அணிவதோடு சமூக இடைவெளியினையும் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.

மாவட்ட நிருவாகம், பெருநகர மருத்துவத் துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் சென்னை மாநகராட்சி, நடத்தப்படும் தடுப்பூசி முகாம்களுக்கு சென்று பொதுமக்கள் தவறாது தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்.

அனைத்து கடைக வணிக வளாகங்கள், திரையரங்குகள் ஆகியவற்றிற்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள நிலையான வழிகாட்டு நடைமுறைகளை கட்டாயம் பின்பற்றி செயல்பட வேண்டும்.

கொரோனா நோயைக் கட்டுப்படுத்த பொது மக்கள் நலன் மேற்கொள்ளும் அரசு நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்