மெட்ரோ ரயில் நிர்வாகம்,சென்னை மெட்ரோ ரயிலில் பொதுமக்கள் இன்றும் கட்டணமின்றி இலவசமாகப் பயணிக்கலாம் என தெரிவித்துள்ளது.
சென்னை சென்ட்ரலில் இருந்து கோயம்பேடு, ஆலந்தூர் வழியாகப் பரங்கிமலைக்கும், டிஎம்எஸ்சில் இருந்து கிண்டி, ஆலந்தூர் வழியாகச் சென்னை விமான நிலையத்துக்கும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மெட்ரோ ரயிலுக்குப் பொதுமக்களை ஈர்க்கும்பொருட்டுக் கடந்த 25ஆம் தேதியில் இருந்து இலவசமாகப் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகிறது.
முதல்நாளில் 50ஆயிரம் பேர் பயணம் செய்ததாகவும், இரண்டாம் நாளில் ஒரு லட்சத்து இருபதாயிரம் பேர் பயணம் செய்ததாகவும், மூன்றாம் நாளான நேற்று ஒரு லட்சத்து 84ஆயிரம் பேர் பயணம் செய்ததாகவும் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. நான்காம் மற்றும் இறுதி நாளாக இன்றும் பொதுமக்கள் இலவசமாகப் பயணம் செய்யலாம் என்றும் மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், கட்சி மற்றும் கட்சியின் அடுத்தக்கட்ட நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். அதன் ஒரு…
டெல்லி: நடிகை தீபிகா படுகோன் சினிமாவில் நடிப்பது மட்டும் இல்லாமல், பல்வேறு சமூக நிகழ்வுகள், சர்ச்சை பேச்சுகள், சில நேரங்களில்…
சென்னை : சட்டப்பேரவையின் 5-வது நாள் கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், அதில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான சட்டதிருத்த…
சென்னை : இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கடைசியாக வெளியான இந்தியன் 2 படம் படுதோல்வியை சந்தித்திருந்த நிலையில், அடுத்ததாக கம்பேக் கொடுக்கும்…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து மூன்றாவது நாளாக உயர்ந்து காணப்படுகிறது. இன்று மட்டும் சவரனுக்கு ரூ.200 உயர்ந்திருக்கிறது.…
சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையின் இன்றயை நிகழ்வுகளில் பங்கேற்க வந்த திமுக சட்டமன்ற உறுப்பினர்கள், 'இவன்தான் அந்த சார்' என அண்ணா…