பொதுத்துறை வங்கி ஊழியர்கள் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம்!

Published by
Venu

பொதுத்துறை வங்கி ஊழியர்கள்  தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஊதிய உயர்வு கோரி நாடு முழுவதும் இன்றும், நாளையும் பொதுத்துறை வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் ஒருபகுதியாக வங்கிக் கிளை முன்பு தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் 200 பொதுத்துறை வங்கிக் கிளைகள் மூடப்பட்ட நிலையில், நாகர்கோவிலில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி முன்பு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கோவையில் ரயில்நிலையம் எதிரே உள்ள பரோடா வங்கியில் நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் மத்திய அரசையும், இந்திய வங்கிகளின் சங்கத்தையும் கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். வங்கி ஊழியர்களின் ஊதிய உயர்வை உயர்த்த மத்திய அரசு முன்வர வேண்டும் என்றும், இல்லையென்றால் நீண்ட வேலைநிறுத்த போராட்டத்தை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்தனர்.

மதுரையில் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா மெயின் கிளை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோரிக்கைகள் நிறைவேறாத பட்சத்தில் எதிர்காலத்தில் போராட்டம் தீவிரம் அடையும் என்று அவர்கள் எச்சரித்தனர்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் அரசு வங்கி ஊழியர் கூட்டமைப்பினர் போராட்டம் நடத்தினர். எஸ்.பி.ஐ. வங்கி முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அவர்கள் ஊதிய உயர்வு, வாடிக்கையாளர்களை பாதிக்கும் வகையிலான சேவைக் கட்டணங்களை ரத்து செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

சேலம் கோட்டையிலுள்ள பாரத ஸ்டேட் வங்கி முன்பு வங்கி தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. வாரா கடன் தொகையை வசூல் செய்ய நடவடிக்கை எடுத்தல், பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்க எதிர்ப்பு தெரிவித்தும் முழக்கங்களை எழுப்பினர்.

மதுரையில் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா மெயின் கிளை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோரிக்கைகள் நிறைவேறாத பட்சத்தில் எதிர்காலத்தில் போராட்டம் தீவிரம் அடையும் என்று அவர்கள் எச்சரித்தனர்.

திருப்பூரில் பொதுத்துறை வங்கிக் கிளைகள் அனைத்தும் மூடப்பட்டதால் ஏ.டி.எம். முன்பு வாடிக்கையாளர்கள் நீண்ட வரிசையில் நின்று பணம் எடுத்துச் செல்கின்றனர்.

இதேபோல் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் பொதுத்துறை வங்கிக் கிளைகள் பூட்டப்பட்டதால் வாடிக்கையாளர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்

Published by
Venu

Recent Posts

இன்று 5 மாவட்டங்களுக்கு கனமழை… 15ம் தேதி தென் மாவட்டங்களுக்கு எச்சரிக்கை.!

இன்று 5 மாவட்டங்களுக்கு கனமழை… 15ம் தேதி தென் மாவட்டங்களுக்கு எச்சரிக்கை.!

சென்னை: கிழக்கு இலங்கைக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…

7 hours ago

“மார்ச் 23ல் ஐபிஎல் தொடர் தொடக்கம்” பிசிசிஐ அறிவிப்பு!

டெல்லி: 2025 ஐபிஎல் தொடர், மார்ச் 23ம் தேதி தொடங்கும் என பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.…

7 hours ago

மகள் – மனைவியுடன் கியூட் உரையாடல்… மகனுடன் வெற்றியை பகிர்ந்து கொண்ட அஜித் குமார்.!

துபாய்: சில நாட்களுக்கு முன்பு, அஜித் கார் விபத்தில் சிக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. தற்போது, இணையதளம் முழுவதும்…

8 hours ago

அதிமுக, தேமுதிக-வை தொடர்ந்து இடைத்தேர்தலை புறக்கணித்த பாஜக!

ஈரோடு: காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்ட நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதிக்கு…

8 hours ago

கார் ரேஸில் வாகை சூடிய அஜித்… தேசிய கொடியோடு வெற்றி கொண்டாட்டம்! – வைரல் வீடியோ..

துபாய்: நடிகர் அஜித் குமார் சினிமாவை அடுத்து பைக், கார் பந்தயங்களில் அதீத ஈடுபாடு கொண்டவர். தற்போது துபாயில் நடைபெறும்…

9 hours ago

“முதல்வரின் ஆணவம் நல்லதல்ல” முதலமைச்சருக்கு ஆளுநர் மாளிகை கண்டனம்.!

சென்னை: வழக்கமாக ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையோடு தொடங்குவது வழக்கம். தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த 6ம் தேதி…

9 hours ago