பொதுச்செயலாளர் தேர்தல் நடத்தாமல் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியது விதிமீறல்!கபில்சிபல்
டெல்லி உயர்நீதிமன்றத்தில்,முழு விசாரணை நடத்தாமல் இரட்டை இலை சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக, டிடிவி தினகரன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரட்டை இலை சின்னத்தை ஓபிஎஸ்-ஈபிஎஸ் அணிக்கு வழங்கிய தேர்தல் ஆணைய உத்தரவை எதிர்த்து, டிடிவி.தினகரன், சசிகலா ஆகியோர் தொடர்ந்த வழக்கில், டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது.
அப்போது அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட கே.சி.பழனிசாமி, அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் பதவியை ரத்து செய்யக்கோரி முறையிட்டார்.
இதனைத் தொடர்ந்து ஆஜரான டிடிவி தினகரன் தரப்பு வழக்கறிஞர் கபில் சிபல், பிரதான உறுப்பினர்களை ஆலோசிக்காமல் அதிமுகவில் புதிய விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது அரசியல் அமைப்புக்கு எதிரானது என வாதிட்டார்.
கட்சியில் பொதுச்செயலாளர் தேர்தல் நடத்தாமல் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியது விதிமீறல் என குற்றம்சாட்டினார். டிடிவி தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை வரும் 20ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.