பொங்கல் பண்டிகைக்கு மதுவிற்பனை 606 கோடிக்கு அமோகமாம்!..கணக்கு காண்பிக்கும் அதிகாரிகள்
- பொங்கல் பண்டிகை காலத்தில் தமிழகத்தில் மதுவிற்பனை அதிகரிப்பு
- மூன்று நாட்களில் 600 கோடி வசூல் ஈட்டியதாக அதிகாரிகள் தகவல்
பொங்கல் பண்டிகை காலத்தில் மதுவிற்பனை அதிகரித்து உள்ளது.கடந்த ஜன.,15,16,17 வரை மூன்று நாட்களில் மட்டும் 606 கோடியே 72 லட்சம் ரூபாய்க்கு மது விற்பனை ஆகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்தாண்டு 10சதவீதம் மதுவிற்பனை உயர்ந்து உள்ளதாக கூறப்படுகிறது.இன்றுடன் பொங்கல் விடுமுறை முடிவடைய உள்ள நிலையில், மதுவிற்பனையானது மேலும் 380 கோடி வரை உயர வாய்ப்புகள் இருப்பதாக டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.மேலும் இன்றுடன் சேர்த்து பொங்கல் விடுமுறையில் மட்டும் டாஸ்மாக் கடைகளில் சுமார் 986 கோடி ரூபாய் அளவிற்கு மது விற்பனையாகக்கூடும் என்ற கூடுதல் தகவல்களையும் தெரிவித்தனர்.