பொங்கலுக்கு கட்டாகும் விடுமுறை …அப்சேட்டில் அரசு ஊழியர்கள்..

Default Image
  • பொங்கல் முன்னிட்டு கூடுதல் விடுமுறை அறிவிக்காததால் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஏமாற்றம்.
  • பயிற்சி துறை இயக்குனரகத்தின் கீழ் இயங்கும் அலவலகங்களுக்கு மட்டும் தொடர்விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் தைத்திருநாள் வருகின்ற 15ந்தேதி கோலகலமாக கொண்டப்பட உள்ளது.இந்நிலையில் பொங்கலை முன்னிட்டு அவரவர் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று கொண்டாடி மகிழ்வார்கள். நடப்பாண்டிற்கான அரசு மற்றும் ஆசியர்களுக்கு கூடுதல் விடுமுறை அறிவிக்காததால் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

அரசு ஊழியர்களுக்கு தீபாவளி- பொங்கல் உள்ளிட்ட பண்டிகைகள் செவ்வாய் அல்லது புதன் கிழமைகளில் வருகின்ற போது அரசு திங்கட்கிழமையை அரசு விடுமுறையாக அறிவிக்கும் அவ்வாறு தொடர்ச்சியாக 5 அல்லது 6 நாட்கள் விடுமுறை கிடைக்கின்ற வகையில் அறிவிப்பை வெளியிடும் இந்த விடுமுறைகளை எல்லாம் சரிசெய்யவதற்காக சனிக்கிழமை வேலை நாட்களாக அறிவித்து விடுவது வழக்கம்.அதன்படி இந்தாண்டு வருகிற 15ம் தேதி பொங்கல் பண்டிகை, 16ம் தேதி மாட்டுப்பொங்கல், 17ம் தேதி காணும் பொங்கல் என தொடர்ச்சியாக 5 நாட்கள் விடுமுறை வருகிறது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் 13ம் தேதியான திங்கள் திங்கள் கிழமை மற்றும்  14ம் தேதி செவ்வாய் கிழமைகளை அரசு விடுமுறையாக  ஒரு வேளை அறிவித்தால் தொடர்ச்சியாக 9 நாட்கள் விடுமுறை கிடைக்கும் என அரசு ஊழியர்கள் அரசிற்கு கோரிக்கை ஒன்றை வைத்தனர். அதை தமிழக அரசும்  ஏற்று 13, 14ம் தேதி விடுமுறையாக அறிவிக்கும் என்று கடந்த 2 நாட்களாக செய்திகள் பரவி வந்தது ஆனால் நேற்று மாலை  வரை  விடுமுறை தொடர்பாக எந்த அறிவிப்பும் அரசு சார்பில்  இதுவரை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்த்க்கது.

இதனால் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூடுதல் விடுமுறை கிடைக்காததால் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.ஆனால் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை இயக்குனரகத்தின் கீழ் இயங்குகின்ற அலவலகங்களில் நேற்று முதல் வரும் 19ம் தேதி வரை எனத் தொடர்ச்சியாக 9 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.இந்த விடுமுறை அலுவலர்களுக்கு மட்டுமே  பொருந்தும் என்பதால் மற்ற பணியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் எல்லாம் வழக்கம்போல் திங்கள் மற்றும்  செவ்வாய் கிழமைகளில் பணிக்கு வர வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்