சென்னை;
தமிழகத்தில் தைத்திருநாள் பண்டிகைக்கான ரயில்வே முன் பதிவு வரும் செப்.,9 இல் தொடங்க உள்ளது.தமிழர்களின் பாரம்பரியத் திருவிழாவான தைப் பொங்கல் பண்டிகை
நாடு முழுவதும் கொண்டாடப்படுவது வழக்கம். மேலும், தமிழர்கள் வாழும்
அனைத்து நாடுகளிலும் இப்பண்டிகை யானது கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ரயில்வே முன் பதிவானது 120 நாட்களுக்கு முன்பே தொடங்கும். இந்தாண்டு ஜன.,11 வெள்ளியன்று தைத்திருநாள் கொண்டாட்டம் தொடங்க உள்ளது. ஜன.,13 ல் போகிப்பண்டிகை ,ஜன.,14 திங்களன்று தைப் பொங்கல் ,ஜன.,15 ல் மாட்டுப் பொங்கல் என தொடர்ந்து திருவிழாக்கள் நடைபெற உள்ளன.
கடந்த 2016 ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்தக் கோரி தமிழகம் முழுவதும் ஏராளமான போராட்டங்கள் நடைபெற்றன. பின்பு, மத்திய அரசு காளைகளை காட்சிப் படுத்தப்படும் பட்டியலில் இருந்து விலக்க அவசர சட்டம் இயற்றியது. இதையடுத்து, ஜல்லிக்கட்டு காலதாமதமாகவே நடத்தப்பட்டது.
எனவே, தமிழர்கள், தைத்திரு நாளை வெகு விமர்சையாக கொண்டாட உள்ளனர். தென் மாவட்டங்களைச் சேர்ந்த பலர், வட மாவட்டங்களில் வேலை நிமித்தமாகவும், உயர் கல்விக்காகவும் தங்கி வாழ்க்கை நடத்தி வருகின்றனர். இவ்வாறு, வெளியூரில் வசிக்கும் பலர் தங்களது சொந்த ஊரில் தைத்திருநாளை குடும்பத்துடன் கொண்டாடவே விரும்பு கின்றனர். இதற்காக ரயிலில் முன் பதிவு செய்து பயணம் மேற்கொள்வதே ஏராளமானோரின் விருப்பமாக உள்ளது.
ரயில் முன் பதிவு தொடங்கப்பட்ட சில நிமிடங்களிலேயே டிக்கெட் அனைத்தும் விற்று, காத்திருப்போர் பட்டியல் நீளும் நிலை உள்ளது.தனியார் ஆம்னி பேருந்து கட்டணக் கொள்ளை காரணமாக, பலர், ரயில் பயணத்தையே விரும்புகின்றனர். மேலும், உடற் சோர்வின்றியும், குடும்பதுடனும் பயணம் செய்ய ரயில் பயணமே சிறந்தது என்பதால், பலர் முன் கூட்டியே திட்டமிட்டு, ரயிலில் முன் பதிவு செய்கின்றனர்.
ஜனவரி 11 வெள்ளிக்கிழமைக்கான முன் பதிவு செப்.9அன்றும், ஜன.12 க்கான முன் பதிவு செப்.10 அன்றும்,ஜன.13 க்கான முன் பதிவு செப்.11 லிலும் நடைபெற உள்ளது.தைப்பொங்கல் மற்றும் தீபாவளி முன் பதிவானது ஒரு சில நிமிடங்களி லேயே முடிவடைந்து விடுகிறது. எனவே, ரயில்வே நிர்வாகமானது, ஏழை, எளிய மக்கள் பயன்படும் விதத்தில் சென்னையிலிருந்து கூடுத லான சிறப்பு ரயில்களை பொங்கலுக்கு முன்பும், பின்பும் இயக்கிட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
DINASUVADU
சென்னை ;முடி உதிர்வதை தவிர்க்க வீட்டிலேயே ஹெர்பல் ஷாம்பு தயாரிப்பது எப்படி என பார்க்கலாம். தேவையான பொருட்கள்; சீயக்காய்- 50…
சென்னை : இந்த வருடத்தின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இதில்தமிழக அரசின் உரையை ஆளுநர் ஆர்.என்.ரவி வாசிக்காமல்,…
சென்னை : 2025ஆம் ஆண்டின் முதல் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இன்று முதல் வரும் சனிக்கிழமை வரையில்…
சென்னை: தமிழகத்தில் பண்டிகை காலங்களிலும் வார இறுதி நாள் விடுமுறைகளை முன்னிட்டும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். வரும் 14ம்…
டெல்லி: 2020-ஐ நம்மால் மறக்க முடியுமா? லாக்-டவுன் காரணமாக வீடுகளிலேயே முடங்கச் செய்த கொரோனா தொற்று (Covid) காலத்தை யாராலும்…
சென்னை : எம்கேபி நகர் திருமுடிவாக்கம் தொழிற்பேட்டை, கலைஞர் தெரு, மங்களபுரி, மகளிர் தொழில் பூங்கா, திருநீர்மலை பிரதான சாலை,…