பேராசிரியை நிர்மலா தேவி விவகாரம்: பெரிய மனிதர்களின் தேவைகளுக்காக கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் வலை!ராமதாஸ்
பாமக நிறுவனர் ராமதாஸ், பல்கலைக்கழக நிர்வாகத்திலுள்ள பெரிய மனிதர்களின் தேவைகளுக்காக கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் வலை வீசப்பட்டது குறித்த வழக்கை குழி தோண்டி புதைக்க சதி நடப்பதாக குற்றம்சாட்டியுள்ளார். இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றப்பட்ட 24 மணி நேரத்திற்குள் அப்பிரிவின் தலைவரும், கூடுதல் தலைமை இயக்குனருமான ஜெயந்த் முரளி இடமாற்றம் செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலிடத்திலிருந்து எவ்வளவு அழுத்தம் வந்தாலும் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தரும் ஜெயந்த் முரளிக்கு பதில், 2015-ஆம் ஆண்டில் பல்வேறு புகார்களால் உளவுப்பிரிவு தலைவர் பொறுப்பில் இருந்து மாற்றப்பட்ட அம்ரேஷ் புஜாரி நியமிக்கப்பட்டுள்ளதாகவும் ராமதாஸ் குறை கூறியுள்ளார். பாலியல் வலை வழக்கின் குற்றவாளிகளைக் காப்பாற்ற ஆளுனர் மாளிகையுடன் இணைந்து அரசும் சதி செய்வதாக அவர் புகார் தெரிவித்துள்ளார்.
எனவே இந்த விவகாரத்தில் சி.பி.சி.ஐ.டி விசாரணை எந்த வகையிலும் உதவாது என்றும், சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி அரசு உத்தரவிட வேண்டும் என்றும் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.