காங்கிரஸ் தேசிய செய்தித் தொடர்பாளர் குஷ்பு ,பேராசிரியை நிர்மலா தேவியின் பின்னணியில் இருப்பவர்களைக் கண்டறிந்து தண்டிக்க வேண்டும் என கூறியுள்ளார்.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் மாணவிகளிடம் சர்ச்சைக்குரிய வகையில் செல்போனில் பேசியதாக வந்த புகாரையடுத்து கல்லூரி உதவிப் பேராசிரியை நிர்மலா தேவி (46) நேற்று மாலை கைது செய்யப்பட்டார். இந்த விவகாரம் தொடர்பாக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்தானம் தலைமையில் உயர்மட்ட விசாரணைக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உத்தரவிட்டுள்ளார்.