பேராசிரியை நிர்மலா தேவி வழக்கு : சிபிசிஐடி ஆதாரத்தை சமர்பித்தது..!
நிர்மலா தேவி சென்னை அழைத்து வரப்பட்ட நிலையில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மாணவிகளை ஆசை வார்த்தை காட்டி அழைத்ததாக வெளியான ஆடியோவில் பதிவான குரல் அவருடையதுதானா என்று அறிவதற்காக இன்று சென்னை தடய அறிவியல் அலுவலகத்தில் குரல் பரிசோதனை நடத்தப்படுகிறது.
அப்போது செல்போனில் பதிவானது போலவே பேச சொல்லி நிர்மலா தேவியின் குரலை பதிவு செய்து அதனை ஆடியோவில் பதிவான முந்தைய உரையாடலுடன் ஒப்பிட்டு தடய அறிவியல் நிபுணர்கள் சோதனை செய்வார்கள். இந்த சோதனை முடிந்ததும் நிர்மலா தேவியை மீண்டும் தனிவேன் மூலம் மதுரை மத்திய சிறைக்கு அழைத்துச் செல்ல போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
இந்நிலையில் தற்போது நிர்மலா தேவியின் தொலைபேசி உரையாடலை ஒப்பிட குரல் மாதிரி பதிவு செய்யப்படுகிறது. நிர்மலா தேவியை நேற்று சிபிசிஐடி காவல்துறையினர் சென்னை அழைத்து வந்தனர்.
சிபிசிஐடி காவல்துறையினர் இந்த வழக்கில் பேராசிரியை நிர்மலா தேவிக்கும் மாணவர் கருப்பசாமிக்கும் தொடர்பு என்று ஆதாரத்தை சமர்பித்தது.