பேராசிரியை நிர்மலா தேவிக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய பல்கலை. நிர்வாக அலுவலர் முத்தையா மற்றும் செயலாளர் முருகன் ஆகியோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக காமராஜர் பல்கலை. நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக்கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக எழுந்த புகாரின்பேரில் கைது செய்யப்பட்டார். சாத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கடந்த 20-ந்தேதி காவலில் எடுத்தனர். 25-ந்தேதி பகல் 2 மணி வரை பேராசிரியை நிர்மலா தேவியிடம் விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு கோர்ட்டு அனுமதி வழங்கியது. அதன்படி விருதுநகர் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் பேராசிரியை நிர்மலாதேவியிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. ஆனால் பேராசிரியை நிர்மலாதேவி இந்த விவகாரத்தில் உயர் அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதாக கூறினாலும் அவர்கள் பெயரை தெரிவிக்கவில்லை. மதுரை காமராஜர் பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி, மேலாண்மை துறை உதவி பேராசிரியர் முருகன் ஆகியோர் தூண்டுதலின்பேரிலேயே மாணவிகளிடம் பேசியதாக மட்டும் தெரிவித்தார். மற்ற கேள்விகளுக்கு ஆம், இல்லை, ஞாபகம் இல்லை என ஒற்றை வரியிலேயே பதில் அளித்துள்ளார். சி.பி.சி.ஐ.டி. போலீசாரின் விசாரணைக்கு அவர் முழுமையாக ஒத்துழைக்காததால் விசாரணையில் தொய்வு நிலை நீடிக்கிறது. இன்றும் அவரிடம் சி.பி.சி.ஐ.டி.
போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். நாளை (25-ந்தேதி) பேராசிரியை நிர்மலாதேவியை கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டி உள்ளது. அப்போது மேலும் 10 நாள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கேட்டு மனு தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளதாக சி.பி.சி.ஐ.டி. தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் நிர்மலாதேவி எங்கு தங்கினார் என குழப்பம் நீடித்த நிலையில் அது குறித்த புதிய ஆதாரங்கள் வெளியாகியுள்ளது. அதன்படி, 38 அறைகள் கொண்ட மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் விருந்தினர் இல்லத்தின் அறை எண் 215-ல் நிர்மலா தேவி 9 நாட்கள் தங்கியுள்ளார். தூத்துக்குடியைச் சேர்ந்த தனியார் கல்லூரி உதவி பேராசிரியையுடன் நிர்மலாதேவி ஒரே அறையில் தங்கியுள்ளார். தூத்துக்குடி பேராசிரியையின் பெயரில் அறை பதிவிடப்பட்டுள்ளது எனவும் தகவல் வெளியானது. பேராசிரியை நிர்மலாதேவி விவகாரத்தில் தூத்துக்குடி பேராசிரியர்கள் ஜெனிபா, தமிழ்மலர் ஆகியோர் சிபிசிஐடி விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பியுள்ளது.
இதேபோல் பேராசிரியர் முருகன் என்பவரை சி.பி.சி.ஐ.டி போலீசார் கைது செய்துள்ளனர்.நிர்மலா தேவிக்கு உதவியாக பேராசிரியர் முருகன் செயல்பட்டிருக்கலாம் என்கிற சந்தேகத்தில் கைது செய்யப்பட்டார்.
விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்த பேராசிரியர் முருகனை சி.பி.சி.ஐ.டி போலீசார் கைது செய்துள்ளனர்.கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த விவகாரத்தில் பேராசிரியை நிர்மலா தேவி ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளார்.
பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் காமராசர் பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் முருகன் கைது செய்யப்பட்டார்.சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் இன்று அவர் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் பேராசிரியை நிர்மலா தேவிக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய பல்கலை. நிர்வாக அலுவலர் முத்தையா மற்றும் செயலாளர் முருகன் ஆகியோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக காமராஜர் பல்கலை. நிர்வாகம் தெரிவித்துள்ளது.
டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…