நிர்மலாதேவி விவகாரத்தில் உதவி பேராசிரியர் முருகனை 5 நாள் சிபிசிஐடி காவலில் எடுத்து விசாரிக்க சாத்தூர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக்கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக எழுந்த புகாரின்பேரில் கைது செய்யப்பட்டார். சாத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கடந்த 20-ந்தேதி காவலில் எடுத்தனர். 25-ந்தேதி பகல் 2 மணி வரை பேராசிரியை நிர்மலா தேவியிடம் விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு கோர்ட்டு அனுமதி வழங்கியது. அதன்படி விருதுநகர் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் பேராசிரியை நிர்மலாதேவியிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. ஆனால் பேராசிரியை நிர்மலாதேவி இந்த விவகாரத்தில் உயர் அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதாக கூறினாலும் அவர்கள் பெயரை தெரிவிக்கவில்லை. மதுரை காமராஜர் பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி, மேலாண்மை துறை உதவி பேராசிரியர் முருகன் ஆகியோர் தூண்டுதலின்பேரிலேயே மாணவிகளிடம் பேசியதாக மட்டும் தெரிவித்தார். மற்ற கேள்விகளுக்கு ஆம், இல்லை, ஞாபகம் இல்லை என ஒற்றை வரியிலேயே பதில் அளித்துள்ளார். சி.பி.சி.ஐ.டி. போலீசாரின் விசாரணைக்கு அவர் முழுமையாக ஒத்துழைக்காததால் விசாரணையில் தொய்வு நிலை நீடிக்கிறது. இன்றும் அவரிடம் சி.பி.சி.ஐ.டி.
போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இன்று (25-ந்தேதி) பேராசிரியை நிர்மலாதேவியை கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டி உள்ளது. அப்போது மேலும் 10 நாள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கேட்டு மனு தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளதாக சி.பி.சி.ஐ.டி. தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் நிர்மலாதேவி எங்கு தங்கினார் என குழப்பம் நீடித்த நிலையில் அது குறித்த புதிய ஆதாரங்கள் வெளியாகியுள்ளது. அதன்படி, 38 அறைகள் கொண்ட மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் விருந்தினர் இல்லத்தின் அறை எண் 215-ல் நிர்மலா தேவி 9 நாட்கள் தங்கியுள்ளார். தூத்துக்குடியைச் சேர்ந்த தனியார் கல்லூரி உதவி பேராசிரியையுடன் நிர்மலாதேவி ஒரே அறையில் தங்கியுள்ளார். தூத்துக்குடி பேராசிரியையின் பெயரில் அறை பதிவிடப்பட்டுள்ளது எனவும் தகவல் வெளியானது. பேராசிரியை நிர்மலாதேவி விவகாரத்தில் தூத்துக்குடி பேராசிரியர்கள் ஜெனிபா, தமிழ்மலர் ஆகியோர் சிபிசிஐடி விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பியுள்ளது.
இதேபோல் பேராசிரியர் முருகன் என்பவரை சி.பி.சி.ஐ.டி போலீசார் கைது செய்துள்ளனர்.நிர்மலா தேவிக்கு உதவியாக பேராசிரியர் முருகன் செயல்பட்டிருக்கலாம் என்கிற சந்தேகத்தில் கைது செய்யப்பட்டார்.
விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்த பேராசிரியர் முருகனை சி.பி.சி.ஐ.டி போலீசார் கைது செய்துள்ளனர்.கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த விவகாரத்தில் பேராசிரியை நிர்மலா தேவி ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் காமராசர் பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் முருகன் கைது செய்யப்பட்டார்.சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் இன்று அவர் கைது செய்யப்பட்டார்.
எனவே நிர்மலாதேவி விவகாரத்தில் கைதான உதவி பேராசிரியர் முருகன் மீது ஜாமீனில் வெளிவர முடியாத இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர் சிபிசிஐடி காவல்துறையினர்.
இந்நிலையில் தற்போது நிர்மலாதேவி விவகாரத்தில் உதவி பேராசிரியர் முருகனை 5 நாள் சிபிசிஐடி காவலில் எடுத்து விசாரிக்க சாத்தூர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இதில் மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற நிர்மலாதேவிக்கு முருகன் உடந்தை என புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சொந்த தொகுதியான கொளத்தூரில் தனது மனைவி துர்கா ஸ்டாலின் உடன் பொங்கல்…
இந்தியாவில் நடைபெறும் மகா கும்பமேளாவின் முக்கியத்துவம் பற்றியும் அதன் வரலாற்றைப் பற்றியும் இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :12…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் 2 நாட்கள் நடைபெறும் பெண்கல்வி குறித்த மாநாடு தொடங்கியுள்ளது. இஸ்லாமிய நாடுகளில் உள்ள…
தினமும் தலைக்கு எண்ணெய் தேய்த்தால் முடி வளருமா என்றும், எண்ணெய் வைக்கவில்லை என்றால் ஏற்படும் பிரச்சனைகளை பற்றியும் இந்தச்செய்தி குறிப்பில்…
சென்னை :பாரம்பரிய மிக்க சுவையில் பொங்கல் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பச்சரிசி=…
துபாய் : நடிகர் அஜித் குமார் சினிமாவை அடுத்து பைக், கார் பந்தயங்களில் அதீத ஈடுபாடு கொண்டுள்ளவர். தற்போது துபாயில்…