நிர்மலா தேவி ஆடியோ விவகாரம் தொடர்பாக தங்கபாண்டி என்பவரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
பேராசிரியர் நிர்மலாதான் கல்லூரி மாணவிகளிடம் செல்போனில் பேசியது என்பது ஆய்வில் நிரூபணம் ஆனது. கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து செல்ல முயற்சித்த அருப்புக்கோட்ட கல்லூரி ஒன்றின் கணித பேராசிரியை நிர்மலாதேவி வழக்கை கவர்னர் நியமனம் செய்த சந்தானம் தலைமையிலான குழுவும், சிபிசிஐடியும் தனித்தனியே விசாரணை செய்து வருகின்றனர். இந்த விவகாரத்தில் பேராசிரியை நிர்மலாதேவிக்க்கு துணை பேராசிரியர் முருகன் என்பவரும், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி என்பவரும் உதவியதாக சிபிசிஐடி போலீசார் சந்தேகம் அடைந்தனர். இந்த நிலையில் மேற்கண்ட இருவரும் திடீரென தலைமறைவானதால் போலீசாரின் சந்தேகம் உறுதியானது. அதில், முருகன் மட்டும் போலீசாரிடம் சிக்கியுள்ளார். நிர்மலா தேவியிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வரும் சிபிசிஐடி போலீசார், நேற்று அருப்புக்கோட்டையில் உள்ள அவரின் வீட்டிற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். வீட்டிற்குள் இருந்த முக்கிய ஆவணங்கள், கணிப்பொறி, பென் டிரைவ், மற்றும் அவரின் காரிலிருந்து ஒரு ரகசிய டைரியையும் போலீசார் கைப்பற்றினார். அதில், அவருடன் தொடர்பில் இருந்த பல விவிஐபிக்கள் மற்றும் உயர் அதிகாரிகளின் தொலைப்பேசி எண்கள் கிடைத்திருப்பதாகவும், அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்த உள்ளதாகவும் நேற்று செய்திகள் வெளியானது.
இந்நிலையில், மாணவிகளை தவறான வழிக்கு அழைத்த ஆடியோவில் உள்ளது பேராசிரியை நிர்மலா தேவியுடையது என நிரூபிக்கப்பட்டது. சென்னையில் நடந்த குரல் சோதனையில் இது உறுதி செய்யப்பட்டது. வெளிப்படையாக மாணவிகள் பாலியல் நடவடிக்கைக்கு அழைக்கவில்லை என்று பேராசிரியை நிர்மலா தேவி கூறியிருந்தார்.
இந்நிலையில் நிர்மலா தேவி ஆடியோ விவகாரம் தொடர்பாக தங்கபாண்டி என்பவரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். நிர்மலா தேவி, உதவி பேராசிரியர் முருகனிடம் அடிக்கடி செல்போனில் பேசிய பதிவின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை: இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக அறிவித்தது இன்னுமே…
கோவை : ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் கடந்த 2021இல் நடைபெற்ற தேர்தலில் திமுக கூட்டணி சார்பாக காங்கிரஸ் கட்சியில்…
நெல்லை : இன்று (டிசம்பர் 20) திருநெல்வேலி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் பட்டப்பகலில் ஒரு கொடூர கொலை சம்பவம் அரங்கேறியுள்ளது.…
சென்னை: அமெரிக்காவை சேர்ந்த யூடியூபர் ஜெய் ஸ்ட்ரேஸி (jay streazy) என்பவர், உலகமுழுவதும் உள்ள பல்வேறு நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு…
சென்னை : இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் திடீரென தான் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தது இன்னுமே…
ஹரியானா: இந்திய தேசிய லோக் தளம் கட்சித் தலைவரும், ஹரியாணா முன்னாள் முதல்வருமான ஓம் பிரகாஷ் சௌதாலா(89) மாரடைப்பால் காலமானார்.…