நிர்மலாதேவி விவகாரத்தில் கைதான உதவி பேராசிரியர் முருகன் மீது ஜாமீனில் வெளிவர முடியாத இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர் சிபிசிஐடி காவல்துறையினர்.
அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக்கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக எழுந்த புகாரின்பேரில் கைது செய்யப்பட்டார். சாத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கடந்த 20-ந்தேதி காவலில் எடுத்தனர். 25-ந்தேதி பகல் 2 மணி வரை பேராசிரியை நிர்மலா தேவியிடம் விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு கோர்ட்டு அனுமதி வழங்கியது. அதன்படி விருதுநகர் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் பேராசிரியை நிர்மலாதேவியிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. ஆனால் பேராசிரியை நிர்மலாதேவி இந்த விவகாரத்தில் உயர் அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதாக கூறினாலும் அவர்கள் பெயரை தெரிவிக்கவில்லை. மதுரை காமராஜர் பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி, மேலாண்மை துறை உதவி பேராசிரியர் முருகன் ஆகியோர் தூண்டுதலின்பேரிலேயே மாணவிகளிடம் பேசியதாக மட்டும் தெரிவித்தார். மற்ற கேள்விகளுக்கு ஆம், இல்லை, ஞாபகம் இல்லை என ஒற்றை வரியிலேயே பதில் அளித்துள்ளார். சி.பி.சி.ஐ.டி. போலீசாரின் விசாரணைக்கு அவர் முழுமையாக ஒத்துழைக்காததால் விசாரணையில் தொய்வு நிலை நீடிக்கிறது. இன்றும் அவரிடம் சி.பி.சி.ஐ.டி.
போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். நாளை (25-ந்தேதி) பேராசிரியை நிர்மலாதேவியை கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டி உள்ளது. அப்போது மேலும் 10 நாள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கேட்டு மனு தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளதாக சி.பி.சி.ஐ.டி. தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் நிர்மலாதேவி எங்கு தங்கினார் என குழப்பம் நீடித்த நிலையில் அது குறித்த புதிய ஆதாரங்கள் வெளியாகியுள்ளது. அதன்படி, 38 அறைகள் கொண்ட மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் விருந்தினர் இல்லத்தின் அறை எண் 215-ல் நிர்மலா தேவி 9 நாட்கள் தங்கியுள்ளார். தூத்துக்குடியைச் சேர்ந்த தனியார் கல்லூரி உதவி பேராசிரியையுடன் நிர்மலாதேவி ஒரே அறையில் தங்கியுள்ளார். தூத்துக்குடி பேராசிரியையின் பெயரில் அறை பதிவிடப்பட்டுள்ளது எனவும் தகவல் வெளியானது. பேராசிரியை நிர்மலாதேவி விவகாரத்தில் தூத்துக்குடி பேராசிரியர்கள் ஜெனிபா, தமிழ்மலர் ஆகியோர் சிபிசிஐடி விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பியுள்ளது.
இதேபோல் பேராசிரியர் முருகன் என்பவரை சி.பி.சி.ஐ.டி போலீசார் கைது செய்துள்ளனர்.நிர்மலா தேவிக்கு உதவியாக பேராசிரியர் முருகன் செயல்பட்டிருக்கலாம் என்கிற சந்தேகத்தில் கைது செய்யப்பட்டார்.
விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்த பேராசிரியர் முருகனை சி.பி.சி.ஐ.டி போலீசார் கைது செய்துள்ளனர்.கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த விவகாரத்தில் பேராசிரியை நிர்மலா தேவி ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளார்.
பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் காமராசர் பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் முருகன் கைது செய்யப்பட்டார்.சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் இன்று அவர் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் நிர்மலாதேவி விவகாரத்தில் கைதான உதவி பேராசிரியர் முருகன் மீது ஜாமீனில் வெளிவர முடியாத இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர் சிபிசிஐடி காவல்துறையினர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
கோவை : சூலூர், டி.எம்.நகர், ரங்கநாதபுரம், எம்.ஜி.புதூர், பி.எஸ்.நகர், கண்ணம்பாளையம், காங்கேயம்பாளையம், ராவுத்தூர் காந்திபுரம், சித்தாபுதூர், டாடாபாத், ஆவாரம்பாளையம் பகுதி,…
வேலூர் : தமிழகத்தில் வருகின்ற 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திமுக இப்போதே தங்களுடைய அரசியல் வேலைகளை…
சென்னை : கங்குவா படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும்…
கேரளா : ஒவ்வொரு ஆண்டு கார்த்திகை மாதம் தொடங்கிவிட்டது என்றாலே நாடுமுழுவதும் உள்ள மக்களில் பலர் கேரளாவில் உள்ள சபரிமலை…
சென்னை : தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அரசியல் வருகை குறித்தும் மாநாட்டில் அவர் பேசிய விஷயங்கள் குறித்தும்…
திருவண்ணாமலை -தமிழ் மாதங்களில் எட்டாவது மாதமாக வரக்கூடியது தான் கார்த்திகை மாதம் .இந்த கார்த்திகை மாதத்தில் அனைவரும் வீடுகளில் விளக்கேற்றி…