பேராசிரியை நிர்மலாதேவி விவகாரம்:7 குழுக்களாக பிரிந்து தீவிரமாக விசாரணை நடத்தும் சிபிசிஐடி!
சிபிசிஐடி போலீசார் பேராசிரியை நிர்மலாதேவி விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த ஏழு குழுக்களை அமைத்துள்ளனர்.
விருதுநகர் சிபிசிஐடி அலுவலகத்தில் ராமநாதபுரம், கன்னியாகுமரி, நெல்லை, தேனி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட சிபிசிஐடி ஆய்வாளர்களுடன் விசாரனை அதிகாரி ராஜேஸ்வரி மற்றும் உதவி விசாரணை அதிகாரி முத்து சங்கரலிங்கம் ஆகியோர் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
இதில், 7 குழுக்களாக பிரிந்து விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக, அருப்புக்கோட்டையில் உள்ள தேவாங்கர் கல்லூரியில் அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட உள்ளதாக கூறப்படுகிறது.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் தேவாங்கர் கலை கல்லூரியில், கணித பேராசிரியராக பணியாற்றும் நிர்மலா தேவி என்பவர், மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து செல்ல தொலைபேசியில் உரையாடிய ஆடியோ வெளியாக பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.