தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று (செப்டம்பர் 9ம் தேதி )நடைபெறகிறது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி உள்பட 7 பேர் கடந்த 27 ஆண்டுகளுக்கு மேலாக சிறை தண்டனையை அனுபவித்து வருகின்றனர். கருணை அடிப்படையில் இவர்களை விடுவிக்க வேண்டும் என தமிழக அரசு, மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு இரண்டு முறை கடிதம் எழுதியிருந்தது. ஆனால், இரண்டு கடிதங்களும் நிராகரிக்கப்பட்டன.
இதனை தொடர்ந்து தங்களை கருணை அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் என்று கோரி அவர்கள் 7 பேரும் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.இந்த மனு மீதான விசாரணை கடந்த 1 ஆண்டுக்கு மேலாக உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.இந்த வழக்கை அரசியல் சாசன அமர்வே விசாரித்து வந்ததது.இந்நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பு நேற்று முன்தினம் காலையில் வழங்கப்பட்டது.
அதில், குற்றம் சாட்டப்பட்டவர்களின் விடுதலைக் குறித்து தமிழக அரசு ஆளுநருக்கு பரிந்துரை செய்யலாம் என்றும், அதன் அடிப்படையில் அவர்கள் விடுதலை செய்வதில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். மேலும் வழக்கை இதோடு முடித்து வைப்பதாகவும் அவர்கள் அறிவித்தனர்.
இந்நிலையில் தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று (செப்.9 தேதி) கூடுகிறது.இதில் ராஜீவ் கொலை வழக்கில் தொடர்புடைய பேரறிவாளன் உட்பட 7பேர் விடுதலை தொடர்பாக அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசனை நடைபெறவுள்ளது.இதற்காக தமிழக அமைச்சரவை சென்னை தலைமைச் செயலகத் தில் இன்று மாலை 4 மணிக்கு கூடுகிறது.
இதனால் இவர்களின் விடுதலை குறித்து விவாதிக்கப்பட்ட பின் விடுதலை குறித்து அறிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. உச்சநீதிமன்றம் விடுதலை குறித்து தமிழக அரசு முடிவெடுக்கலாம் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.
சென்னை : தெற்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு மையம் உருவாகி இருக்கிறது. இது இலங்கைக்கு கீழே இருந்து…
சென்னை : சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து இரண்டாம் நாளாக கடும் சரிவைக் கண்டுள்ளது. கடந்த வாரம்…
சென்னை : அதானி குழுமம் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் ஊழல் குற்றசாட்டு முன்வைக்கப்பட்டு வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில், அதானியை தமிழக…
மும்பை : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் கடந்த 2 நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்றது. அதில், பல வரலாறை புரட்டி…
சென்னை : கடந்த 2020 பிப்ரவரி மாதம் தமிழக சட்டப்பேரவையில் அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஓரு முக்கிய தீர்மானத்தை…
மும்பை : எஸ்ஸார் குழுமத்தின் இணை நிறுவனரான ஷஷி ரூயா, நேற்று திங்கள்கிழமை (நவ.-25) தனது 80 வயதில் காலமானார்.…