பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிப்பது தொடர்பாக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அறிக்கையை அனுப்பினார்.
ராஜீவ்காந்தி கொலைவழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ராபார்ட் பயஸ், ஜெயகுமார், ரவிச்சந்திரன், உள்ளிட்ட 7 பேர் சிறைதண்டனை அனுபவித்து வருகின்றனர். அவர்களை முன்னதாகவே விடுதலை செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், இது தொடர்பான வழக்கில், அவர்கள் 7பேரையும் விடுவிக்க ஆளுநருக்கு பரிந்துரைக்க, தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது என தெரிவித்தது. உச்சநீதிமன்ற தீர்ப்பின் நகல் கிடைத்ததும், ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என ஏற்கெனவே அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்திருந்தார்.
அந்த வகையில், சென்னை தலைமை செயலகத்தில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், அமைச்சரவைக் கூட்டம் கூடியது. இதில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட அமைச்சர்கள் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிப்பது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. 2 மணி நேரமாக நடைபெற்ற அமைச்சரவை கூட்டம் நிறைவடைந்தது. இதில், பல்வேறு தீரமானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன்படி, ராஜீவ் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஏழு பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என ஆளுநருக்கு பரிந்துரைக்க, அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் இன்று பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிப்பது தொடர்பாக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அறிக்கையை அனுப்பினார்.தமிழக அரசு ஆளுநருக்கு பரிந்துரை செய்ததை அடுத்து ஆளுநர் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளார்.
மெல்போர்ன் : ஆஸ்ரேலியாவுக்கு எதிரான இந்த 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் முக்கிய வீரர்களான ரோகித் சர்மா (3),…
டெல்லி : மாநிலத்தில் பல பகுதிகளில் கனமழை பெய்த காரணத்தால் சில இடங்களில் வெள்ளம் ஏற்பட்டது. குறிப்பாக டெல்லி என்சிஆர்…
சென்னை : அடுத்த ஆண்டு (2025) ஜனவரி 14ம் தேதி (செவ்வாய்க்கிழமை) பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதனையடுத்து, தமிழர் திருநாளாம்…
சென்னை : சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது. மாணவி கொடுத்த புகாரின்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில், இந்த…
சென்னை : பாமக பொதுக்குழு அந்த கூட்டத்தில் இளைஞரணி தலைவர் நியமனம் செய்யப்படுவது தொடர்பாக ராமதாஸ்- அன்புமணி இடையே வார்த்தை மோதல்…