பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை .! தமிழக அமைச்சரவை கூட்டம்…! முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் தொடங்கியது…!

Published by
Venu

முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் தலைமைச் செயலகத்தில் தொடங்கியது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி உள்பட 7 பேர் கடந்த 27 ஆண்டுகளுக்கு மேலாக சிறை தண்டனையை அனுபவித்து வருகின்றனர். கருணை அடிப்படையில் இவர்களை விடுவிக்க வேண்டும் என தமிழக அரசு, மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு இரண்டு முறை கடிதம் எழுதியிருந்தது. ஆனால், இரண்டு கடிதங்களும் நிராகரிக்கப்பட்டன.

இதனை தொடர்ந்து தங்களை கருணை அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் என்று கோரி அவர்கள் 7 பேரும் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.இந்த மனு மீதான விசாரணை கடந்த 1 ஆண்டுக்கு மேலாக உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.இந்த வழக்கை அரசியல் சாசன அமர்வே விசாரித்து வந்ததது.இந்நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பு நேற்று முன்தினம் காலையில் வழங்கப்பட்டது.

அதில், குற்றம் சாட்டப்பட்டவர்களின் விடுதலைக் குறித்து தமிழக அரசு ஆளுநருக்கு பரிந்துரை செய்யலாம் என்றும், அதன் அடிப்படையில் அவர்கள் விடுதலை செய்வதில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். மேலும் வழக்கை இதோடு முடித்து வைப்பதாகவும் அவர்கள் அறிவித்தனர்.

இந்நிலையில் தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று (செப்.9 தேதி) கூடுகிறது.இதில் ராஜீவ் கொலை வழக்கில் தொடர்புடைய பேரறிவாளன் உட்பட 7பேர் விடுதலை தொடர்பாக அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசனை நடைபெறவுள்ளது.இதற்காக முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் தலைமைச் செயலகத்தில் தொடங்கியது. முதலமைச்சர் பழனிசாமி, அமைச்சர்கள் ஜெயக்குமார், காமராஜ், துரைக்கண்ணு, கடம்பூர் ராஜு உள்ளிட்டோர் தலைமைச் செயலகம் பங்கேற்றுள்ளனர் .

Recent Posts

‘ஓய்வு பெற்றால் என்ன? ..தேவைப்பட்டால் திரும்ப வருவேன்..’! அலர்ட் கொடுத்த டேவிட் வார்னர்!

‘ஓய்வு பெற்றால் என்ன? ..தேவைப்பட்டால் திரும்ப வருவேன்..’! அலர்ட் கொடுத்த டேவிட் வார்னர்!

சிட்னி : இந்தியா மற்றும் ஆஸ்ரேலியா இரண்டு அணிகளும் வருடம்தோறும் மோதிக்கொள்ளும் டெஸ்ட் கிரிக்கெட் தொடரான (பார்டர்-கவாஸ்கர் டிராபி) தொடர் இந்த…

31 mins ago

‘உக்ரைன் விவகாரத்தில் அமைதியான முறையிலே தீர்வு வேண்டும்’ ..புடினிடம் பிரதமர் மோடி வலியுறுத்தல்!

கசான் : ரஷ்யா, தென்னாப்பிர்க்கா, சீனா, இந்தியா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளை உள்ளடக்கிய ‘பிரிக்ஸ்’ கூட்டமைப்பின் மாநாடு 16வது உச்சிமாநாடு…

1 hour ago

டானா புயல் எதிரொலி : 28 ரயில் சேவைகள் ரத்து..! முழு விவரம் இதோ!

டெல்லி : வங்கக்கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் நாளை காலை கிழக்கு மத்திய…

2 hours ago

எடப்பாடி பழனிச்சாமி கனவில் இருக்கிறாரா? கேள்வி எழுப்பிய முதல்வர் மு.க.ஸ்டாலின்!

நாமக்கல் : அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவானது இன்று நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற முதல்வர் மு.க.…

2 hours ago

ஐப்பசி மாதத்தில் துலாஸ்நானம் ஏன் செய்ய வேண்டும் தெரியுமா?

சென்னை -துலா ஸ்நானம்  என்றால் என்ன, அதன் பலன்கள் மற்றும் ஐப்பசி மாதத்தின் சிறப்புகளை பற்றி இந்த ஆன்மீக செய்தி…

3 hours ago

IND vs NZ : 2-வது டெஸ்ட் போட்டி..! காயம் மீண்டு களமிறங்கும் ரிஷப் பண்ட்?

புனே : இந்தியா, நியூஸிலாந்து அணிகளுக்கு இடையே 3 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரானது நடைபெற்று வருகிறது. இதில்,முன்னதாக நடைபெற்ற…

4 hours ago