பேரறிவாளன் உட்பட 7 பேரையும் விடுதலை செய்ய  வேண்டும்…! தேமுதிக தலைவர் விஜயகாந்த்

Default Image

பேரறிவாளன் உட்பட 7 பேரையும் விடுதலை செய்ய  வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி உள்பட 7 பேர் கடந்த 27 ஆண்டுகளுக்கு மேலாக சிறை தண்டனையை அனுபவித்து வருகின்றனர். கருணை அடிப்படையில் இவர்களை விடுவிக்க வேண்டும் என தமிழக அரசு, மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு இரண்டு முறை கடிதம் எழுதியிருந்தது. ஆனால், இரண்டு கடிதங்களும் நிராகரிக்கப்பட்டன.

இதனை தொடர்ந்து தங்களை கருணை அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் என்று கோரி அவர்கள் 7 பேரும் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.இந்த மனு மீதான விசாரணை கடந்த 1 ஆண்டுக்கு மேலாக உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.இந்த வழக்கை அரசியல் சாசன அமர்வே விசாரித்து வந்ததது.இந்நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பு நேற்று முன்தினம் காலையில் வழங்கப்பட்டது.

அதில், குற்றம் சாட்டப்பட்டவர்களின் விடுதலைக் குறித்து தமிழக அரசு ஆளுநருக்கு பரிந்துரை செய்யலாம் என்றும், அதன் அடிப்படையில் அவர்கள் விடுதலை செய்வதில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். மேலும் வழக்கை இதோடு முடித்து வைப்பதாகவும் அவர்கள் அறிவித்தனர்.

இந்நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் இது தொடர்பாக வெளியிட்ட கூறுகையில், பேரறிவாளன் உட்பட 7 பேரையும் விடுதலை செய்ய மத்திய மாநில அரசுகள், ஆளுநர் உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்