நான் கருணாநிதியின் மகன், சொன்னதை செய்வேன் என்று மு.க .அழகிரி தெரிவித்துள்ளார்.
திமுகவின் முன்னால் தலைவராக இருந்து மறைந்த கருணாநிதி அவர்களின் மரணத்திற்கு பிறகு முக.அழகிரியா , ஸ்டாலினா என்ற ஒரு எதிர்பார்ப்பு வந்தது.ஆனால் முக.ஸ்டாலின் தான் அவருடைய ஆளுமையை உயர்த்தி திமுக தலைவராக பதவியேற்றார்.
ஆனால் முக.அழகிரி என்னிடம் தான் திமுக தொண்டர்கள் உள்ளனர், என் கவலை எல்லாம் கட்சியை பற்றியதுதான் என்று முக.ஸ்டாலினுக்கு எதிராக செயல்பட ஆரம்பித்தார்.அது மட்டும் இல்லாமல் வருகின்ற செப்டம்பர் 5ம் தேதி நடக்க உள்ள, பேரணி நடத்துவதில் நம்முடைய பலத்தை கட்ட வேண்டும் என்றும் அவருடைய ஆதரவாளர்களை வைத்து தீட்டிமிட்டு வந்தார்.
ஆனால் முக.ஸ்டாலின் திமுக தலைவரானதும் ஒட்டு மொத்த திமுக தொண்டர்களும் ஸ்டாலின் ஆதரவாளர்களாக இருக்கின்றனர்.நம்முடைய பலம் வெகுவாக குறைந்துள்ளது என்பதை உணர்ந்த முக.அழகிரி பின்னர் என்னையும் திமுகவில் சேர்த்துக் கொண்டால் ஸ்டாலினை தலைவராக ஏற்றுக்கொள்ள தயார் என்று கூறினார்.
மேலும் கட்சியில் என் மகனுக்கு எந்த விதமான பதவியும் கேட்கவில்லை.தொண்டர்கள் என் பக்கமே இருக்கிறார்கள். கருணாநிதியின் உண்மையான விசுவாசிகள் என் பக்கமே உள்ளனர். பலர் என்னை தொடர்பு கொண்டு பேசி வருகிறார்கள்.கட்சியில் எல்லோருடனும் இணைந்து பணியாற்ற தயார். எல்லோருடனும் பயணிக்க தயாராக உள்ளேன். அவர்கள்தான் இதுகுறித்து முடிவெடுக்க வேண்டும், என்று அழகிரி கூறினார் .
இந்நிலையில் மதுரையில் தனது ஆதரவாளர்களுடனான ஆலோசனைக்கு பிறகு மு.க.அழகிரி மீண்டும் கருத்து ஒன்றை கூறியுள்ளார் .அவர் கூறுகையில்,நான் கருணாநிதியின் மகன், சொன்னதை செய்வேன் .மேலும்
சென்னையில் நடைபெறும் அமைதிப் பேரணியில் ஒரு லட்சம் பேர்க்கு மேல் வருவார்கள் என்றும் உறுதியுடன் கூறினார்.
DINASUVADU
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…