பேரணியில் பெரிதும் பேசப்பட்ட ‘கரம்கோர்ப்போம்..கழகம் காப்போம்’..!யாரிடமிருந்து கழகத்தை காக்க..!பேரணியினால் வெடித்தது சர்ச்சை..!!
திமுக முன்னாள் தலைவர் கலைஞர் கருணாந்தி மறைவுக்கு பிறகு அழகிரி-ஸ்டாலின் இடையே ஆன பனிப்போர் விஸ்வரூபம் எடுக்க துவங்கியது நேரடியாக தன்னை கட்சியில் சேர்க்க வேண்டும் என்று மு.க ஸ்டானுக்கு வலியுறுத்தினார்.இது குறித்து தற்போது வரை மவுனம் காத்து வருகிறார் ஸ்டாலின்.
இந்நிலையில் தன் பக்கம் தான் திமுக தொண்டர்கள் உள்ளனர் என்று முக.அழகிரி கூறியது திமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.மேலும் என் கவலை எல்லாம் கட்சியை பற்றியதுதான் என்று திமுக தலைவராக உள்ள முக.ஸ்டாலினுக்கு எதிராக செயல்பட ஆரம்பிக்க தொடங்கினார் அதன் முதற்படி தான் இந்த அமைதி பேரணி அத்னை எந்த தடையுமின்றி நடத்தி முடித்துள்ளார். தன்னுடைய பலத்தை இந்த பேரணியில் காட்டுவேன் என்று அதிரடியாக அறிவித்தார்.
திமுக தலைவராக ஸ்டாலின் தேர்ந்தேடுக்க பட்ட நிலையில்பேரணி நடக்குமா நடக்காதா என்று குழப்பம் நிலவியது.இதனிடையே மு.க.அழகிரி மீண்டும் கருத்து ஒன்றை கூறினார் .அதில்நான் கருணாநிதியின் மகன், சொன்னதை செய்வேன்.
மேலும் சென்னையில் நடைபெறும் அமைதிப் பேரணியில் ஒரு லட்சம் பேர்க்கு மேல் வருவார்கள் என்றும் உறுதியுடன் கூறினார்.
இதனிடையே இன்று காலை திருவல்லிகேணியில் துவங்கிய அமைதி பேரணியில் எல்லோரையும் ஈர்த்தது கரம்கோர்ப்போம் கழகம் காப்போம்..!! என்ற வாசகம் தான் இதனை அழகிரி தொண்டர்கள் ஏந்தி வந்தனர்.இதனை பார்க்கும் போது கட்சியை காக்க வேண்டும் என்று அழகிரி கூறியது குறிப்பிடத்தக்கது.இதனால் அரசியல் விமர்சகரிடையே கட்சியை யாரிடமிருந்து அழகிரி காக்க என்னுகிறார் என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.இந்நிலையில் என் பலத்தை பேரணியில் நிரூபிப்பேன் என்றவர் கருணாநிதி இறந்த 30 நாளில் அஞ்சலி செலுத்தவே பேரணி என்று புதியதொரு விளக்கத்தை அளித்துள்ளார்.
இந்நிலையில் இந்த பேரணி குறித்து திமுக பொருளாளர் துரைமுருகனிடன் கேட்கப்பட்ட போது ‘நோ’கமெண்ட்ஸ் என்கிறார்.அழகிரியை வரவேற்ற திமுக நிர்வாகி அடுத்த நொடி அதிரடி நீக்கம் என்று திமுக வில் ஒதுக்கப்படுகிறா மு.க அழகிரி..!இது குறித்து திமுக தலைவர் ஏன் அமைதி காக்கிறார்.அவரின் அமைதி பலருக்கும் கேள்விகளை முன்னிருத்துகிறது.இந்த பேரணி தாக்கத்தை ஏற்படுத்துமா திமுகாவில்..தன்னுடைய பலத்தை நிரூபித்த அழகிரியை எப்படி அணுக போகிறது திமுக..!என்று அரசியல் வட்டாரங்கள் கேள்வி கனைகளை திமுகவின் மீது தொடுகிறது விளக்கமளிக்குமா திமுக தலைமை…!மேலும் கரம்கோர்ப்போம் கழகம் காப்போம் என்கிற வசனம் கேள்வியையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.
DINASUVADU