பெருந்தலாறு, பரப்பலாறு அணை திறக்க முதல்வர் உத்தரவு
திண்டுக்கல் மாவட்டம் பெருந்தலாறு மற்றும் பரப்பலாறு அணைகளிலிருந்து புதிய ஆயக்கட்டு புன்செய் பாசனம், பச்சையாறு குளங்கள் பாசன நிலுவைப் பயிர்களுக்கு தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
இந்த பெருந்தலாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பதால் 9,600 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெரும். பரப்பலாறு அணையில் தண்ணீர் திறப்பதன் மூலம் 1223.17 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெரும்.