பெரியார் சிலையை உடைத்தவர்கள் திருடனைப் போல, அனைவரும் உறங்கியபிறகு அதை செய்துள்ளதாகவும், ஆண்மை இருந்தால், அவன் பகலில் இதை செய்திருக்க வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
தந்தை பெரியாரின் சிலை புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உடைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே அமைக்கப்பட்டிருந்த தந்தை பெரியாரின் சிலை ஒன்று மர்ம நபர்களால் நேற்றிரவு கடுமையாக சேதப்படுத்தப்பட்டுள்ளது. அவருடைய சிலையில், பெரியார் தலைப்பகுதி முழுவதுமாக உடைக்கப்பட்டிருந்தது. இச்சம்பவத்தை கண்டித்து, சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் திராவிடர் கழகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையே, சிலையில் துண்டிக்கப்பட்ட தலைப்பகுதி மீண்டும் ஒட்டப்பட்டது. சிலையை சேதப்படுத்திய மர்ம நபர்களை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.
பெரியாரின் சிலை உடைக்கப்பட்டதற்கு திராவிட இயக்கத் தலைவர்கள் கி.வீரமணி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், மதிமுக தலைவர் வைகோ, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், திமுக எம்.பி. கனிமொழி, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகிய அனைவரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் பெரியார் சிலை உடைக்கப்பட்டதற்கு ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாஜக தான் காரணம் எனவும் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்நிலையில் பெரியார் சிலையை உடைத்தவர்கள் திருடனைப் போல, அனைவரும் உறங்கியபிறகு அதை செய்துள்ளதாகவும், ஆண்மை இருந்தால், அவன் பகலில் இதை செய்திருக்க வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…
மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த நிலையில்,…
பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…
கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…