பெரியார் சிலை,ராமராஜ்ய ரத யாத்திரை, ஏப்ரல் 14ம் தேதி கட்சிக் கொடி அனைத்திற்கும் மொக்கையாக பதில் கூறிய ரஜினிகாந்த்!

Published by
Venu

புதுக்கோட்டை ஆலங்குடியில் பெரியார் சிலை உடைக்கப்பட்டது காட்டுமிராண்டித்தனமானது என்று ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

தந்தை பெரியாரின் சிலை புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உடைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே அமைக்கப்பட்டிருந்த தந்தை பெரியாரின் சிலை ஒன்று மர்ம நபர்களால் நேற்றிரவு கடுமையாக சேதப்படுத்தப்பட்டுள்ளது. அவருடைய சிலையில், பெரியார் தலைப்பகுதி முழுவதுமாக உடைக்கப்பட்டிருந்தது. இச்சம்பவத்தை கண்டித்து, சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் திராவிடர் கழகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையே, சிலையில் துண்டிக்கப்பட்ட தலைப்பகுதி மீண்டும் ஒட்டப்பட்டது. சிலையை சேதப்படுத்திய மர்ம நபர்களை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

பெரியாரின் சிலை உடைக்கப்பட்டதற்கு திராவிட இயக்கத் தலைவர்கள் கி.வீரமணி, மு.க. ஸ்டாலின், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், மதிமுக தலைவர் வைகோ, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், திமுக எம்.பி. கனிமொழி, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகிய அனைவரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் பெரியார் சிலை உடைக்கப்பட்டதற்கு ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாஜக தான் காரணம் எனவும் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்நிலையில் தமிழகத்தில் ராமராஜ்ய ரத யாத்திரை நடப்பது பற்றிய கேள்விக்கு, மதக்கலவரத்துக்கு இடம் தரக்கூடாது என ரஜினி பதில் கூறியுள்ளார் . ஏப்ரல் 14ம் தேதி கட்சிக் கொடி அறிமுகப்படுத்தப் போவதாக வரும் செய்திக்கு ரஜினி மறுப்பு தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை ஆலங்குடியில் பெரியார் சிலை உடைக்கப்பட்டது காட்டுமிராண்டித்தனமானது என்று ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Published by
Venu

Recent Posts

அன்புமணி vs ராமதாஸ் : “உனக்கு விருப்பம் இல்லைனா அவ்வளவு தான்”..மேடையில் நடந்தது என்ன?

அன்புமணி vs ராமதாஸ் : “உனக்கு விருப்பம் இல்லைனா அவ்வளவு தான்”..மேடையில் நடந்தது என்ன?

புதுச்சேரி : பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டம் இன்று (டிசம்பர் 28) புதுச்சேரி நாவற்குளம் நெடுஞ்சாலையில்,…

12 minutes ago

நீ ஜெயிச்சிட்ட மாறா! சதம் விளாசிய நிதிஷ் குமார் ரெட்டி…கண்கலங்கிய தந்தை!

மெல்போர்ன் : சினிமா படத்தில் வரும்  "இங்க வாய்ப்புன்றது நம்முளுக்கு அவ்ளோ சீக்கிரம் கிடைக்கிறது இல்ல இது நம்ப ஆட்டம்…

13 minutes ago

ஞானசேகரன் குறித்து மா. சுப்பிரமணியன் ஏன் விளக்கமளிக்கவில்லை? அண்ணாமலை கேள்வி!

சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில்  மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில், இந்த சம்பவம்…

57 minutes ago

ராமதாஸ் – அன்புமணி மோதல் : “எல்லாம் சரியாகிவிடும்”..எம்.எல்.ஏ.அருள் பேச்சு!

சென்னை : இன்று நடைபெற்ற பாமக பொதுக்குழு அந்த கூட்டத்தில் இளைஞரணி தலைவர் நியமனம் செய்யப்படுவது தொடர்பாக ராமதாஸ்- அன்புமணி…

2 hours ago

தந்தை ராமதாஸ் உடன் வார்த்தை மோதல்! பனையூரில் தனி அலுவலகம் தொடங்கிய அன்புமணி!

விழுப்புரம் : இன்று பாமக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி மற்றும் பாமக…

2 hours ago

வன்கொடுமை விவகாரம்: மாணவிக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு – சென்னை உயர்நீதிமன்றம் உத்தர

சென்னை: அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம்…

3 hours ago