பெரியார் சிலை,ராமராஜ்ய ரத யாத்திரை, ஏப்ரல் 14ம் தேதி கட்சிக் கொடி அனைத்திற்கும் மொக்கையாக பதில் கூறிய ரஜினிகாந்த்!
புதுக்கோட்டை ஆலங்குடியில் பெரியார் சிலை உடைக்கப்பட்டது காட்டுமிராண்டித்தனமானது என்று ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
தந்தை பெரியாரின் சிலை புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உடைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே அமைக்கப்பட்டிருந்த தந்தை பெரியாரின் சிலை ஒன்று மர்ம நபர்களால் நேற்றிரவு கடுமையாக சேதப்படுத்தப்பட்டுள்ளது. அவருடைய சிலையில், பெரியார் தலைப்பகுதி முழுவதுமாக உடைக்கப்பட்டிருந்தது. இச்சம்பவத்தை கண்டித்து, சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் திராவிடர் கழகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையே, சிலையில் துண்டிக்கப்பட்ட தலைப்பகுதி மீண்டும் ஒட்டப்பட்டது. சிலையை சேதப்படுத்திய மர்ம நபர்களை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.
பெரியாரின் சிலை உடைக்கப்பட்டதற்கு திராவிட இயக்கத் தலைவர்கள் கி.வீரமணி, மு.க. ஸ்டாலின், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், மதிமுக தலைவர் வைகோ, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், திமுக எம்.பி. கனிமொழி, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகிய அனைவரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் பெரியார் சிலை உடைக்கப்பட்டதற்கு ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாஜக தான் காரணம் எனவும் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்நிலையில் தமிழகத்தில் ராமராஜ்ய ரத யாத்திரை நடப்பது பற்றிய கேள்விக்கு, மதக்கலவரத்துக்கு இடம் தரக்கூடாது என ரஜினி பதில் கூறியுள்ளார் . ஏப்ரல் 14ம் தேதி கட்சிக் கொடி அறிமுகப்படுத்தப் போவதாக வரும் செய்திக்கு ரஜினி மறுப்பு தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை ஆலங்குடியில் பெரியார் சிலை உடைக்கப்பட்டது காட்டுமிராண்டித்தனமானது என்று ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.