பெண் பத்திரிகையாளர்கள் பற்றி அவதூறு பேச்சு:எஸ்.வி.சேகர் பற்றிய கேள்விக்கு எஸ்கேப் ஆன தமிழிசை சவுந்தரராஜன்!
தமிழக பாஜக மாநிலத்தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்,பெண் செய்தியாளர்களை விமர்சித்த எஸ்.வி.சேகர் மீது பா.ஜ.க சார்பில் நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற கேள்விக்கு பதிலளிக்காமல் சென்றார்.
சென்னை பள்ளிக்கரணையை அடுத்த நன்மங்கலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பா.ஜ.க. மாநிலத் தலைவர் என்ற முறையில் தன்னுடைய கருத்து மட்டுமே கட்சியின் கருத்து என்று கூறினார். எஸ்.வி.சேகர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது சிரித்துக் கொண்டே அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.