9 ஆம் வகுப்பு மாணவி திருச்சி மண்ணச்சநல்லூர் அருகே கடத்தப்பட்ட விவகாரத்தில், பெண் எம்.எல்.ஏவை முற்றுகையிட்ட உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி மண்ணச்ச நல்லூர் அடுத்த இனாம் கல்பாளையத்தை சேர்ந்த 9 ஆம் வகுப்பு மாணவியை ஒருதலையாக காதலித்து வந்த ராஜசேகர் என்ற 27 வயது நபர் கடத்திச்சென்றதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
எந்த ஒரு வேலைக்கும் செல்லாமல் ஊர் சுற்றிவந்த ராஜசேகர், மணச்சநல்லூர் எம்.எல்.ஏ பரமேஸ்வரியின் ஆதரவாளர் என்று போலீசாரிடம் கூறியதால், காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றஞ்சாட்டிய மாணவியின் உறவினர்கள் எம்.எல்.ஏ பரமேஸ்வரியை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மாணவியின் உறவினர்களின் நெருக்கடியால் செய்வதறியாது திகைத்த எம்.எல்.ஏ பரமேஸ்வரியோ, தனது பெயரை தவறாக பயன்படுத்தி உள்ளதாகவும், “இன்னும் அரை மணி நேரத்தில் போலீசார் உங்கள் பெண்ணை மீட்டு வீட்டுக்கு கொண்டுவருவார்கள்” என்று வாக்குறுதி அளித்தார்.
அவர் கூறியபடியே அடுத்த அரைமனி நேரத்தில் 9 ஆம் வகுப்பு மாணவி மட்டும் காவல் நிலையத்துக்கு மீட்டு அழைத்து வரப்பட்டார். கடத்திச்சென்ற ராஜசேகரை காவல்துறையினர் தப்பவிட்டதாகக் கூறி உறவினர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்
காதலனின் ஆசைவார்த்தையில் மயங்கி சிறுமியே விருப்பப்பட்டு சென்றாலும் அது கடத்தலாகவே பார்க்கப்படும் என்பதால் ராஜசேகர் மீது கடத்தல் வழக்கு பதிவு செய்ய உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : நேற்று முன்தினம் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகளில் நிலவிய…
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் கடலூர் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புகளின் போது…
ஈரோடு : காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, ஈரோடு கிழக்கு…
சென்னை : நாம் தமிழா் கட்சி மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகியவற்றை அங்கீகாரம் பெற்ற மாநில கட்சிகளாக இந்திய…
ஈரோடு : காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, ஈரோடு கிழக்கு…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரருமான ரவிச்சந்திரன் அஷ்வின் ஜனவரி 9-ஆம்…