பெண்ணின் படத்தை ஆபாசமாக சமூக வலைதளங்களில் விடுவதாக மிரட்டி பணம் கேட்ட 3பேர் கைது !

Default Image

3 பேர் சென்னை அடுத்த குன்றத்தூரில் ஆசைக்கு இணங்க மறுத்த பெண்ணின் படத்தை ஆபாசமாக சமூக வலைதளங்களில் விடுவதாக மிரட்டி பணம் கேட்டு மிரட்டிய நபர்கள்  கைது செய்யப்பட்டனர். அந்தப் பெண் அழகு நிலையத்தில் பியூட்டிசியனாக  வேலை செய்து வந்தார்.

இந்த அழகு நிலையத்திற்கு சென்ற பைனான்சியர் ஜெகன்  என்பவருக்கும், அப்பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த பழக்கத்தினை பயன்படுத்திக்கொண்ட ஜெகன், அப்பெண்ணை பலவிதங்களில் போட்டோ எடுத்துள்ளார். பின்னர் அந்த போட்டோவை காட்டி தனது ஆசைக்கு இணங்க வேண்டும் எனவும், இல்லையென்றால் தனக்கு 3 லட்சம் ரூபாய் பணம் வேண்டும் என்று கூறி மிரட்டியதால், பெண்ணின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர்.

போலீசாரின் அறிவுறுத்தலின்படி, அப்பெண் பணம் தயாராக இருப்பதாகவும் குன்றத்தூரில் வந்து வாங்கி கொள்ளும்படி கூறி ஜெகனிடம் உள்ளார். பணத்தை வாங்க வந்த ஜெகன் மற்றும் அவர் நண்பர்கள் தேவ்சரண், கிருஷ்ணன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்