பெண்கள் விடுதியில் கேமரா பொருத்தி ஆபாச படம் – உரிமையாளர் கைது…!!
சென்னையில், பெண்கள் தங்கும் விடுதியில் உள்ள குளியல் அறையில் கேமரா பொருத்திய அந்த விடுதியின் உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை நங்கநல்லூர் தில்லைகங்கா நகர் 1-வது தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், குரோம்பேட்டை அஸ்தினாபுரம் பகுதியை சேர்ந்த சம்பத் ராஜ் என்பவர் பெண்கள் தங்கும் விடுதியை நடத்தி வருகிறார். விடுதியில் சீரமைப்பு பணிகள் செய்வதாகக் கூறி, தொடர்ந்து பணியில் ஈடுபட்டதால் சந்தேகமடைந்த பெண்கள் சோதனையிட்டதில், குளியலறையில் கேமரா பொருத்தப்பட்டுள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து விடுதியில் தங்கியிருந்த பெண்கள் ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதை தொடர்ந்து, போலீசார் விடுதி உரிமையாளர் சம்பத்ராஜை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
DINASUVADU.COM