பெண்கள் பாதுகாப்பு…..6 வாரத்திற்குள் தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு…!!
பெண்களுக்கு ஏற்படும் குடும்ப வன்முறைகளை ஒழிக்க அரசு பாதுகாப்பு அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பெண்களுக்கு எதிரான ஏற்படும் குடும்ப வன்முறைகளை தடுக்கவும், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், மாநில அரசுகள் குடும்ப வன்முறைச் சட்டத்தின் படி பாதுகாப்பு அதிகாரிகளை நியமிக்க வேண்டும் எனவும் மத்திய அமைச்சர் மேனகா காந்தி கடிதம் எழுதியிருந்தார்.மத்திய அமைச்சர் மேனகா காந்தி எழுதிய கடிதத்தின் அடிப்படையில் தாலுகா அளவில் பாதுகாப்பு அதிகாரிகளை நியமிக்க உத்தரவிட வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஒருவர் மனு தாக்கல் செய்திருந்தார்.இதை விசாரித்த தலைமை நீதிபதி தமிழக அரசு 6 வாரத்திற்குள் பெண்கள் பாதுகாப்பு குறித்த முழுமையான அறிக்கையுடன் பதிலளிக்க வேண்டுமென்று கூறி வழக்கை ஜனவரி 25-ம் தேதிக்கு ஒத்திவைத்ததார்.
dinasuvadu.com