ஐயப்பன் கோவில் விவகாரத்தில் பெண்களை மதியுங்கள்,ஒடுக்க நினைக்காதீர்கள் என நடிகர் சிவகுமார் தெரிவித்தார்.
கேரள ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் செல்லாமல் என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தது.இந்த தீர்ப்பு இந்திய முழுவதும் மக்களிடமே மிகுந்த வரவேற்பை பெற்றது.ஆனால் இது கேரளா இந்து அமைப்பிடையே எதிர்ப்பை கிளப்பியது.தீர்ப்பை எதிர்த்து பெண்கள் உட்பட போராட்டங்களும் நடத்தினர்.இந்நிலையில் கேரளா அரசு தீர்ப்பை அமுல்படுத்த 144 தடை உத்தரவு , தடியடி என பல நடவடிக்கை மேற்கொண்டு போராட்டத்தை கட்டுப்படுத்த முயன்றும் போராட்டம் முடிந்தபாடில்லை.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் சிவகுமார்,நாம் பிறப்பதற்கு காரணம் நம்முடைய தாய் தான் , அவள் ஒரு பெண் என்பதை மறந்துவிட கூடாது. பெண்களை மதியுங்கள் பெண்கள் பல்வேறு துறையில் சாதித்து வருகின்றனர்.ரயில் நிலையம் , வங்கி , ஏர்போர்ட் என அனைத்து துறைகளிலும் பெண்கள் சாதித்து வருகின்றனர்.இனிமேலும் பெண்களை யாரும் ஒடுக்க முடியாது.எனவே ஐயப்பன் கோவில் விவகாரத்தில் மகர ஜோதி நேரத்தில் ஆண்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் மற்ற நாட்களின் ஐயப்பன் கோவிலுக்குள் பெண்களை அனுமதிக்க வழிவகை செய்யவேண்டும் என நடிகர் சிவகுமார் தெரிவித்தார்.
DINASUVADU
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக திடீரென…
டெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அம்பேத்கர் பற்றி பேசிய விஷயம் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. நாடாளுமன்ற…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று,…
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…