தமிழக அரசு, பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் குறித்த புகார்களை மின்னஞ்சல் மூலம் தெரிவிக்க ஷீ பாக்ஸ் ((SHE-BOX)) என்ற புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாக, தெரிவித்துள்ளது.
சட்டப்பேரவையில் சமூகநலம் மற்றும் சத்துணவுத்துறையின் கொள்கை விளக்க குறிப்பு தாக்கல் செய்யப்பட்டது. அதில், பாதிக்கப்பட்ட பெண்கள், காவல்துறை மற்றும் மருத்துவமனைகளை எந்த நேரத்திலும் தொடர்பு கொள்ளும் திட்டத்தை செயல்படுத்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதேபோல், பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் குறித்த புகார்களை மின்னஞ்சல் மூலம் தெரிவிக்க ஷீ பாக்ஸ் ((SHE-BOX)) என்ற புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாகவும், இந்த திட்டத்தின் மாநில ஒருங்கிணைப்பாளராக, சமூக நல ஆணையரே நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில் மாவட்ட அளவில் புகார்களை விசாரிக்க மாவட்ட சமூக நல அலுவலர்களே, மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாகவும், இதற்காக அவர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
மேலும், கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அமைச்சர் சரோஜா, தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்திற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என்றும், கேட்கப்பட்ட சான்றிதழ்களில் ஒன்று இல்லாவிட்டாலும் விண்ணப்பம் நிராகரிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
இதையடுத்துப் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தை ஏழைகளுக்காக அறிமுகப்படுத்திய ஜெயலலிதா, பெண் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் பட்டதாரிகளுக்கு நிதியுதவியை உயர்த்தியதாக தெரிவித்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
நியூ யார்க் : மெட்டா நிறுவனத்தின் தலைமை அதிகாரி மார்க் ஸுக்கர்பர்க் அண்மையில், தி ஜோ ரோகன் எக்ஸ்பீரியன்ஸ் போட்காஸ்ட்…
புனே : இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்திய ராணுவத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து முதன் முறையாக இந்தியாவுக்கு என அதிகாரபூர்வ…
"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால் பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…
சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…
சென்னை : z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…