பெட்ரோல் விலை உயர்வு…!பாஜகவினரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளோம்…!தேர்தலுக்குள் பெட்ரோல் விலை குறையும்…!பாஜக மூத்த தலைவர் தகவல்
பெட்ரோல் விலை உயர்வு குறித்து பா.ஜ.க. மூத்த தலைவர் இல.கணேசன் கருத்து தெரிவித்துள்ளார்.
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ள போதிலும் இந்தியாவில் மட்டும் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படாமல் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.இந்த விலையேற்றம் வாகன ஓட்டிகளை தொடர்ந்து அவதிப்பட வைத்து வருகிறது.
இந்நிலையில் இன்றைய 1 லிட்டர் பெட்ரோல் 14 காசுகள் விலை உயர்ந்து 84 ரூபாய் 19 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், டீசல் லிட்டருக்கு 12 காசுகள் விலை அதிகரித்து 77 ரூபாய் 25 காசுகளுக்கு விற்பனையாகிறது.இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.
இந்நிலையில் பெட்ரோல் விலை உயர்வு குறித்து பா.ஜ.க. மூத்த தலைவர் இல.கணேசன் கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில்,மக்களை பெட்ரோல், டீசல் விலை உயர்வு அதிகம் பாதித்துள்ளது.பாஜகவினரும் பாதிக்கப்பட்டுள்ளோம் .அதேபோல் இன்னும் ஒருவாரத்திற்குள் பெட்ரோல், டீசல் விலை டம்முனு குறைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.மேலும் இது தொடர்பாக ஆய்வு செய்ய பிரதமர் நரேந்திர மோடி ஒரு குழு அமைத்துள்ளார். அந்த குழு வருகிற 15-ந்தேதி விசாரணை நடத்துகிறது .மேலும் தேர்தலுக்குள் பெட்ரோல், டீசல் விலை குறையும் என நம்புகிறோம் என்றும் தெரிவித்துள்ளார்.