பெட்ரோல் , டீசல் விலை மேலும் குறைந்தது…!!

Default Image
சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 22 காசுகள் குறைந்துள்ளது. டீசல் விலையும் குறைந்தது.
பெட்ரோல்-டீசல் விலை தினசரி நிர்ணயம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டதில் இருந்து ராக்கெட் வேகத்தில் விலை அதிகரித்தது. ஒரு கட்டத்தில் வரலாறு காணாத விலை உயர்வை பெட்ரோல்-டீசல் சந்தித்தன.
இந்த நிலையில் தொடர் உச்சத்தில் இருந்து வந்த பெட்ரோல்-டீசல் விலை கடந்த 2 வாரங்களுக்கும் மேலாக  இறங்கு முகத்தில் இருக்கிறது. கடந்த 18-ந் தேதியில் இருந்து பெட்ரோல்-டீசல் விலை குறைந்து கொண்டே வருகிறது. கடந்த இரு வாரங்களாக தொடர்ந்து  பெட்ரோல், டீசல் விலை குறைந்து கொண்டே வந்தது வாகன ஓட்டிகளுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.
இன்று பெட்ரோல், விலை லிட்டருக்கு 22 காசுகள் குறைந்து ரூ.81.24க்கு விற்பனையாகிறது. டீசல் விலை 19 காசுகள் குறைந்து ரூ.77.05-க்கு விற்பனை செய்யப்படுகின்றது.கடந்த 22 நாட்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.4.86 -ம், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2.99-ம் குறைந்துள்ளது.
dinasuvadu.com 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்