பெட்ரோல் டீசல் விலை உயர்வு…!பாஜகாவை குறைகூறுவது சரியல்ல …!மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்
பெட்ரோல் டீசல் விலை உயர்வு குறித்து பாஜக மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் தவறானவை என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ள போதிலும் இந்தியாவில் மட்டும் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படாமல் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.இந்த விலையேற்றம் வாகன ஓட்டிகளை தொடர்ந்து அவதிப்பட வைத்து வருகிறது.
இந்நிலையில் இது தொடர்பாக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறுகையில் பெட்ரோல் டீசல் விலை உயர்வு குறித்து பாஜக மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் தவறானவை என்று தெரிவித்துள்ளார்.அதேபோல் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தற்போதை விட அதிக தொகுதிகளில் வெற்றி பெறும் பாஜக என்றும் தெரிவித்துள்ளார்.