பெட்ரோல் ,டீசல் விலை உயர்வு…!தமிழக அரசு ரூ.6.78 வரை குறைக்கலாம்…!ஆதாரத்துடன் அறிக்கை விட்ட ராமதாஸ்

Published by
Venu

தமிழக அரசு நினைத்தால் பெட்ரோல் மீதான வரியை ரூ.6.78 காசுகளாக குறைக்கலாம் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ள போதிலும் இந்தியாவில் மட்டும் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படாமல் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.இந்த விலையேற்றம் வாகன ஓட்டிகளை தொடர்ந்து அவதிப்பட வைத்து வருகிறது.

இந்நிலையில் இன்றைய 1 லிட்டர் பெட்ரோல் 14 காசுகள் விலை உயர்ந்து 84 ரூபாய் 19 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், டீசல் லிட்டருக்கு 12 காசுகள் விலை அதிகரித்து 77 ரூபாய் 25 காசுகளுக்கு விற்பனையாகிறது.

இந்நிலையில் பெட்ரோல்,டீசல் விலை தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.அவர் வெளியிட்ட அறிக்கையில், மாநில அரசு தான் பெட்ரோல், டீசல் மீதான வரிகளால் மத்திய அரசை விட அதிக வருவாய் ஈட்டுகிறது.தற்போதைய நிலையில் 1 லிட்டர் பெட்ரோல், டீசல் மீது மத்திய அரசு வசூலிக்கும் கலால் வரி முறையே ரூ.19.48, ரூ.15.33 காசுகள் மட்டும் தான்.

ஆனால் தமிழக அரசுக்கோ 1 லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.21.36, 1 லிட்டர் டீசலுக்கு ரூ.15.45 வீதம் மதிப்புக் கூட்டு வரி கிடைக்கிறது. இது தவிர மத்திய அரசு வசூலிக்கும் கலால் வரியில், மாநில அரசின் பங்காக பெட்ரோலுக்கு ரூ.8.18, டீசலுக்கு ரூ.6.47 கிடைக்கிறது.

தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக 1 லிட்டர் பெட்ரோல் விற்பனை செய்யப்பட்டால் ரூ.29.54, 1 லிட்டர் டீசல் விற்கப்பட்டால் ரூ.21.92 வரியாக கிடைக்கிறது. அதாவது பெட்ரோல், டீசல் விலையில் மூன்றில் ஒரு பங்கு மாநில அரசுக்கு வருவாயாக கிடைக்கும் நிலையில், எரிபொருட்களின் மீதான வரியை குறைத்து விலையை கட்டுப்படுத்துவதில் மாநில அரசுக்கு எந்த பங்கும் இல்லை என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறுவது பொறுப்பை தட்டிக்கழிக்கும் செயலாகும்.

Image result for ராமதாஸ்

இதனால் தமிழக அரசு பெட்ரோல் மீதான மதிப்புக் கூட்டு வரியை ரூ.6.78 அளவுக்கும், டீசல் மீதான வரியை ரூ.4.97 அளவுக்கும் குறைக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

12 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

18 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

18 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

18 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

18 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

18 hours ago