பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து வாகனத்திற்கு இறுதிச்சடங்கு செய்யும் போராட்டம்..!
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து செவ்வாயன்று வாலிபர் சங்கத்தினர் கண்டன நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வரலாறு காணாத அளவிற்கு பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலை பன்மடங்கு உயர்ந்துள்ளது. ஆகவே, ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தை புரட்டிபோட்டுள்ள எரிபொருள் விலை உயர்வை கட்டுப்படுத்த தவறிய மத்திய மோடி அரசை கண்டித்தும், பெட்ரோல், டீசல் விலைகளை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வர வலியுறுத்தியும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
சேலம் தலைமை தபால் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வாலிபர் சங்க கிழக்கு மாநகர செயலாளர் பெரியசாமி தலைமை வகித்தார். இதில் மாவட்ட செயலாளர் என்.பிரவின்குமார், பொருளாளர் வெங்கடேஷ் ஆகியோர் கண்டன உரையாற்றினர். மேலும், இந்த ஆர்ப்பாட்டத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டிக்கும் வகையில் போராட்டத்தில் பங்கேற்றோர் சைக்கிள்களை ஓட்டி தங்களது எதிர்ப்பை காட்டினர். இந்த நூதன ஆர்ப்பாட்டத்தில் திரளானோர் பங்கேற்று கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து வள்ளுவர்கோட்டத்தில் வாகனத்திற்கு இறுதிச்சடங்கு செய்யும் போராட்டம் #DYFI தென்- சென்னை சார்பில் இன்று நடைபெற்றது. #dyfi @dyficec @dyfitn #Theekkathir pic.twitter.com/I7iuatHGv8
— Theekkathir (@Theekkathir) June 5, 2018