பெட்ரோல்,டீசல் மூலம் தங்களின் வரி வருவாயை பெருக்குவதில் மத்திய,மாநில அரசுகள் முனைப்பு! டிடிவி தினகரன்
பெட்ரோல்,டீசல் மூலம் தங்களின் வரி வருவாயை பெருக்குவதில் மத்திய,மாநில அரசுகள் முனைப்பு காட்டுவதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
மேலும் கூறுகையில், தங்கள் போக்கை மாற்றிக்கொண்டு பெட்ரோல்,டீசல் மீதான வரியை மத்திய, மாநில அரசுகள் குறைக்கவேண்டும்.அதேபோல் தெற்காசியாவிலேயே இந்தியா தான் அதிகளவு வரிகளை பெட்ரோல்,டீசல் மீது விதிப்பதாக நினைக்கிறேன் என்றும் கூறினார்.
இன்றைய மே(21) பெட்ரோல், டீசல் விலை நிலவரம்:
பெட்ரோலின் விலை லிட்டருக்கு 28 பைசா உயர்ந்து ரூ.79.47 ஆகவும், டீசலின் விலை லிட்டருக்கு 27பைசா உயர்ந்து ரூ.71.59 ஆக விற்பனை செய்யப்பட்டுவருகிறது.இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது.
நேற்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்:
சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 35 காசு உயர்ந்து ரூ.79.13 ஆக நிர்ணயிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை 28 காசு உயர்ந்து ரூ.71.32 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.