புயல் பாதித்த பகுதிகளில் 6,059 மருத்துவ முகாம்களில் 3,94,995 பேருக்கு சிகிச்சை…!!சுகாதாரத்துறை தகவல்..!!
கஜா புயலில் பாதிக்கப்பட்ட மக்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.இதில் குழந்தைகள்,பெண்கள்,முதியவர்கள்,என அனைவரும் அடங்குவர்.இந்நிலையில் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்கு உணவு உட்பட அனைத்துமே அரசு சார்பில் அளிக்கப்பட்டு வருகிறது.ஆனால் இன்று காலை தஞ்சை மாவட்ட முகாம் ஒன்றில் அடிப்படை மற்றும் சுகாதார சீர்கேட்டால் பெண் உயிரிழந்துள்ளாக தகவல் வெளியாகி நிலையில் சுகாதாரத்துறை இது குறித்து தெரிவித்துள்ளது.
புயல் பாதித்த பகுதிகளில் இதுவரை 6,059 மருத்துவ முகாம்களின் மூலம் 3,94,995 நபர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது தனியார் மருத்துவமனைகள் மூலம் நடத்தப்பட்ட சிறப்பு முகாம்கள் மூலம் 68,234 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதில் 2127 பேர் மேல் சிகிச்சைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர். மேலும் நேற்று வரை 17,95,572 பேருக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
DINASUVADU