புயல் பாதித்த நாகையில் பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆய்வு..!!மத்திய அரசு நிச்சயம் உதவும்..!!
கஜா புயலால் 4 மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டது.இதில் நாகை மாவட்டம் சற்று அதிகமாகவே பாதிக்கப்பட்டது.இந்நிலையில் மக்களின் வீடுகள் ,விவசாய நிலங்கள்,வளர்ப்பு விலங்குகள் என அனைத்துமே இழந்து தவித்து வருகின்றனர். அவர்களுக்கு தொண்டு நிறுவனங்களும் மக்களும் உதவி வருகின்றனர். ஆனால் பாதித்த பகுதிகளில் மக்கள் 12 நாள்களை விட அதிகமாக கடந்த நிலையிலும் மின்சாரமின்றி,அடிப்படை தேவைகள் இன்றியும் துன்பப்பட்டு வரும் நிலையில் நேற்று முதல்வர் மக்களை சந்தித்தார்.
ஆனால் பிரதமர் இந்த புயல் சேதங்களையும்,மக்களையும் பார்க்க வரவில்லை அதற்கு பதிலாக ஆய்வுக்குழுவை அனுப்பினார் இந்த குழு பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று பார்வையிட்டது.இந்நிலையில் புயலால் பாதித்த பல்வேறு பகுதிகளை, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பார்வையிட்டார்.பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா திருச்சியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் இன்று மாலை கோடியக்கரை வந்தார்.பின்னர் அங்கிருந்து கார் மூலம் ஆறுகாட்டுத்துறை மீனவர் கிராமத்திற்கு சென்றார் அங்கு புயலால் பாதிக்கப்பட்டு படகுகளை இழந்த மீனவர்களை சந்தித்து ஆறுதல் கூறிய அவர் மக்கள் கூட்டத்தின் மத்தியில் பேசிய நிர்மலா சீதாராமன் புயலால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்த மக்களுக்கு மத்திய அரசு நிச்சயம் உதவி செய்யும் என்று உறுதி அளித்தார்.