வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி வலுவடைந்துள்ளதால் புயலாக மாற வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் எச்சரிககி விடுத்துள்ளது.
இதன் காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர், அரபிக் கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ளதாக தெரிவித்தார்.
பாலசந்திரன் பேசியதாவது, “ லூபன் என பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் மேலும் வலுப்பெற்று தெற்கு ஓமன் கரையை நோக்கி நகரும். புதிதாக வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி தாழ்வு மண்டலமாக மாறி மத்திய வங்கக்கடலில் நிலவுகிறது.
இது புயலாக வலுப்பெற்று ஒடிசா கரையை நோக்கி நகரும். இதனால் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சூழல் மாறியுள்ளது. அடுத்த 24 மணிநேரத்தில் வடதமிழகத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் இதனால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் “ என்று பாலச்சந்திரன் தெரிவித்தார்.
இதனிடையே, தமிழகத்தில் 29 மாவட்டங்களில் இயல்பை காட்டிலும் கூடுதல் மழை பெய்துள்ளதாகவும், வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயாராக இருப்பதாகவும் வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் அறிவுறுத்தினார்.
DINASUVADU
சென்னை : சினிமாவை பொறுத்தவரையில் நடிகர்களுக்குள் போட்டிகள் இருந்தாலும் அது ஆரோக்கியமான போட்டியாகத் தான் இருக்கும். அந்த போட்டியை சினிமாவை…
சென்னை : இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் ஸ்டாலினிடம் அதானியுடன் தமிழக முதலவர் சந்திப்பு நிகழ்ந்ததா என்பது குறித்து விளக்கம்…
ஜெட்டா : ஐபிஎல் தொடருக்காக நடைபெற்று வரும் மெகா ஏலத்தின் இரண்டாம் நாள் இன்று தொடங்கியுள்ளது. இந்த ஏலத்தில் தொடக்கமே…
இந்நிலையில், வரவிருக்கும் நாட்களில் எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது? காற்றழுத்த தாழ்வின் நிலை என்ன என்பது குறித்து வானிலை…
சென்னை : சர்வதேச அளவில், இன்று பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு தமிழகத்தில் பல…
சென்னை :சட்டுனு ஒரு சைடு டிஷ் வேணுமா?. அப்போ இந்த புளி மிளகாய் ரெசிபியை ட்ரை பண்ணி பாருங்க.. தேவையான…