புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மதுரையில் இருந்து நிவாரண பொருட்கள்…!!!
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மதுரையில் இருந்து நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சினிமா பிரபலங்கள் மற்றும் பல பொதுநல அமைப்பினர் நிவாரண பொருட்களை வழங்கி வருகின்றனர். இந்நிலையில், புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி நிர்வாகத்தினர், பேராசிரியர்கள், பணியாளர்கள் சார்பில் ஒன்றரை டான் அரிசி கலெக்டர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
மேலும் அவனியாபுரம் மக்கள் நீதி மையம் சார்பில் இரண்டு வேன்களில் மருந்து, உணவு பொருட்கள் மாற்று உடைகள் கொண்டு செல்லப்பட்டது.