தமிழக மாணவர்கள் கைகளில் ஆயுதம் ஏந்துவது வருத்தம் அளிப்பதாக முதல்வர் பழனிச்சாமி தெரிவித்தார்.
சென்னை பல்கலைக்கழகம் ஆண்டு விழா நடைபெற்றது இதில் பங்கேற்ற முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசினார் மாணவர் சேர்க்கை விகிதத்தில் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடத்தில் உள்ளது. மனித முன்னேற்றத்திற்கு சக்தி வாய்ந்த கருவியாக கல்வி திகழ்கிறது.தமிழக அரசு கல்விக்கு உரிய முக்கியத்துவத்தை அளித்து வருகிறது. கல்வித்துறையில் மாணவர்கள் நலனுக்காக பல்வேறு முன்னோடித் திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.என்று கூறினார்.
மேலும் பேசிய அவர் புத்தகங்களை தூக்க வேண்டிய கைகளில் மாணவர்கள் ஆயுதங்களை தூக்கி செல்வது வருத்தமாக உள்ளது. வன்முறைகளை மாணவர்கள் தவிர்க்க வேண்டும், அதற்கு பெற்றோர்களின் ஒத்துழைப்பு அவசியம் என்று பேசினார். இந்த விழாவில் துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு கல்லூரி மாணவர்கள் ஓடும் பேருந்தில் பட்டா கத்தியுடன் சாலையில் உரசி சாகசம் என்ற பெயரில் பேருந்தில் பயணித்த சகபயணிகளை சங்கடப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
DINASUVADU
சென்னை : சீமான் தலைமையில் 2010ஆம் ஆண்டு மே மாதம் ஆரம்பிக்கப்பட்ட கட்சி 'நாம் தமிழர் கட்சி'. அப்போது முதல்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை நடிகர் விஜய் தொடங்கி வரும் பிப்ரவரி மாதத்தோடு ஓராண்டு நிறைவு…
டெல்லி : விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை ஸ்பேஸ் டாக்கிங் (Space Docking) செயல்முறை மூலம் இணைக்கும் நோக்கத்திற்காக ஸ்ரீஹரிகோட்டாவில்…
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதம் நடந்தது.…
மதுரை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் கடலூர் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புகளின் போது…
சீனா : கார் ஒட்டிக்கொண்டு சாலையில் வேகமாக செல்லும் போது சில சமயங்களில், சாலைகளில் இருக்கும் மேடு பள்ளங்களை கவனிக்காமல்…